குறள்
பொருள்:
மலர்ந்த முகத்தோடு, இனிமையான வார்த்தைகளைச் சொல்வது, இதயபூர்வமாக மனம் மகிழ்ந்து ஒருவருக்கு ஒரு பொருளைக் கொடுப்பதை விட நல்லது. நல்ல வார்த்தைகளைப் பேசி தர்மம் செய்தால், நாம் செய்த தர்மத்தைவிட சிறந்ததாகக் கருதப்படும்.
விளக்கம்:
நான் என் நெருங்கிய நண்பர் ஒருவருடன் பெங் களூருக்குச் சென்றுகொண்டிருந்தேன். போகும் வழியில் பேசிக் கொண்டே போனோம். இளைஞர்கள் மத்தியில் உரையாற்றவிருக் கும் எனக்கு, ஏதாவது ஆலோசனைகள் இருந்தால் சொல்லுங்களேன் என்று அவரிடம் கேட்டேன். ஆலோசனைகள் என்று எதையும் அவர் எனக்குச் சொல்லவில்லை. ஆனால், கீழ்கண்ட சில ஞான ரத்தினங்களை அவர் எனக்கு வழங்கினார்.
அவை இவை: ’பேசும்போது உண்மையைப் பேசுங்கள். வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்றுங்கள். உங்களுடைய பொறுப்பைப் பூர்த்திசெய்யுங்கள். தாக்குவதில் இருந்தும், சட்டவிரோதமான மற்றும் மோசமானவற்றை எடுத்துக்கொள்வதில் இருந்தும் உங்கள் கைகளை விலக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
மிகவும் அபாரமான செயல்கள் யாவை? ஒரு மனித ஜிவனின் இதயத்துக்கு இதம் தருவது மற்றும் பசித்திருப்போருக்கு உணவு தருவது; வேதனையில் தவிப்போருக்கு உதவி செய்வது; துயரப்படுவோரின் துன்பச் சுமையைக் குறைப்பது.
இறைவனின் படைப்புகளுக்கு மிகுந்த நன்மை செய்ய முயற்சிப்போனே இறைவனின் பவித்திரமான அன்புக்குப் பாத்திரமானவன்.’
மேற்கண்ட ஞான ரத்தினங்கள் எல்லாம் இறை தூதர் முகம்மது நபி பெருமான் வழங்கிய அருள் மொழிகளாகும். இதை எனக்குச் சொன்ன நண்பர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தீட்சிதரின் கொள்ளுப் பேரனும், கணபாடிகளான வேத விற்பனர் ஒருவரின் பேரனுமான நண்பர் ஒருவர். அந்த நண்பர் வேறு யாருமல்ல ஒய்.எஸ்.ராஜன்தான் அவர்!
குறள்
பொருள்:
வாணிகம் செய்பவர் பிறர் பொருளையும் தன் பொருள் போல் நினைத்து வாணிகம் செய்தால் அவரது தொழில் சிறப்பாக நடைபெறும். அதாவது ஒரு வாணிகர் ஒருவரிடம் இருந்து பொருள் வாங்குவதையும், அந்தப் பொருளை விற்பனை செய்வதையும் ஒத்தமுறையில் செய்ய வேண்டும். வாணிகத்தில் நாணயமில்லாச் செயல்களுக்கு இடம் தரக் கூடாது.
விளக்கம்:
வாணிகம் என்றதும் என் நினைவு என் இளமை பருவத்தை நோக்கி செல்லும். என் தந்தை வழிப் பாட்டி சுல்தான் பீவீ பாத்திமா அவர்கள் முகமது நபி அவர்களின் பிறப்பு, வளர்ப்பு பற்றிய செய்திகளை எனக்குக் கதைக் கதையாக அடிக்கடி சொல்வார்கள்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இளம்பருவத்தில் வாணிகம் செய்யத் தொடங்கியதையும், அவர்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கருதாமல், மக்களுக்கு நன்மை செய்ய விரும்பியே அந்த வாணிகத்தை செய்தார்களாம். நபிகளின் இனியப் பண்புகளைப் பற்றிக் கேள்விப்பட்ட வாணிகக் குடும்பத்தைச் சேர்ந்த கதீஜா அம்மையார், நபிகளை நம்பி மேலும் முதலீடு செய்தார்களாம். மற்றவர் பொருளையும் தனது பொருளைப் போல் கருதி வாணிபம் செய்யும் நபிகள் நாயகம், மைசரா என்னும் பணியாளருடன் வெளிநாட்டு வாணிபத்துக்காகப் பயணம் செய்து திரும்பினார்கள். வாணிகம் முடிந்த பின்னர் கணக்கிட்டுப் பார்த்தால் முதலீடு மூன்று மடங்காகப் பெருகியிருந்ததாம். இதைக் கண்ட கதீஜா அம்மையார் நபிகள் நாயகம் அவர்களிடத்தில் அன்பும் மரியாதையும் கொண்டு, தன் வாணிகப் பொறுப்புகள் அனைத்தையும் நபிகளிடம் ஒப்படைத்து, அவரையே திருமணமும் செய்து கொண்டார்களாம். இந்தத் திருக்குறள் இதைத்தான் எனக்கு நினைவூட்டுகிறது!
- நல்வழி நீளும்…