வலைஞர் பக்கம்

ஒரு நிமிடக் கதை: தேர்வு

பர்வீன் யூனுஸ்

கல்யாண தரகர், நாகராஜிடம் இரண்டு பெண்களின் ஃபோட்டோக்களை கொடுத்து, சொன்னார்.

“தம்பி.. கீதா, மாலா ரெண்டு பேரும் இரட்டையர்கள். அழகு, நிறம், உயரம், படிப்பு இதுல எல்லாம் கொஞ்சம் கூட வித் தியாசம் கிடையாது. இவங்கள்ல உங்களுக்கு யாரைப் பிடிச் சிருக்கோ, அவங்களை கல்யாணம் பேசி முடிச்சுடலாம்.”

போட்டோக்களை பார்த்த நாகராஜ், “வர்ற ஞாயிற்றுக் கிழமை பெண் பார்க்க போவோம்..அதுக்கு முன்னாடி, ரெண்டு பேரோடவும் நான் போன்ல பேசணும்” என்றான்.

“ஓ..தாராளமா.. இந்தாங்க நம்பர். நீங்க பேசுவீங்கன்னும் அவங்ககிட்ட சொல்லிடறேன்.”

சனிக்கிழமை, தரகருக்கு நாகராஜிடமிருந்து போன் வந்தது.

“ரெண்டு பேர் கிட்டயும் பேசிட்டேன். கீதாவை பெண் பார்க்க ஏற்பாடு பண்ணிடுங்க.”

“அப்படியே ஆகட்டும். கீதாவை நீங்க தேர்ந்தெடுத் ததற்கு காரணம் சொல்ல முடி யுமா. சும்மா தெரிஞ்சுக்கலா மேன்னுதான்.”

“உங்க கூட தனியா பேசணும்..வெளியில எங்கேயாவது மீட் பண்ண சம்மதமான்னு ரெண்டு பேர் கிட்டயும் கேட்டேன். அதுக்கு மாலா, ‘ஓ.கே...காஃபி ஷாப்ல சந்திக்கலாம்’னு சொன்னாங்க. கீதாவோ ‘முறைப்படி பெண் பார்க்க வரப் போறீங்க. அங்கே என் பெற்றோருக்கு தெரிஞ்சே பேசுவோமே. வெளி இடங்கள்ல எதுக்கு’ன்னு கேட்டாங்க. திருமணத்துக்கு முன்னாடி எதை செஞ்சாலும்,அதை பெத்த வங்களுக்கு தெரிஞ்சே செய் யணும்னு நினைக்கிற அந்த குணம் எனக்கு சிறப்பா பட்டுச்சு..அதான்” என்றான் நாகராஜ்.

SCROLL FOR NEXT