வலைஞர் பக்கம்

பளிச் பத்து 19: ஐஸ் கிரீம்

செய்திப்பிரிவு

கி.பி. 7-ம் நூற்றாண்டில், சீனாவில் ஐஸ்கிரீம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தண்ணீரில் இனிப்பைக் கலந்து உறையவைத்து, பின்னர் அதை துண்டுகளாக்கி பழத்துண்டுகளைக் கலந்து முதலில் ஐஸ்கிரீம்கள் தயாரிக்கப்பட்டன.

குளிர்சாதனப் பெட்டியை கண்டுபிடிப்பதற்கு முன்பு, பனிமலைகளில் இருந்து ஐஸ் கட்டிகளை வெட்டி எடுத்துவந்து ஐஸ்கிரீம்களை தயாரித்து வந்தனர்.

ரோமானிய மன்னர்கள் அடிமைகளை பனிமலைகளின் உச்சிக்கு அனுப்பி, ஐஸ் கட்டிகளைக் கொண்டுவந்து ஐஸ்கிரீம்களை தயாரித்துள்ளனர்.

பனிமலைகளில் இருந்து நகரங்களுக்கு ஐஸ்கட்டிகளை உருகாமல் எடுத்துவருவது சிரமமாக இருந்ததால், முதலில் ஐஸ்கிரீம்கள் அதிக விலையுள்ளதாக இருந்தன.

அமெரிக்க முன்னாள் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன், 1790-ம்ஆண்டிலேயே, ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்காக 200 அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளார்.

செயின்ட் லூயிஸ் நகரில் 1904-ம் ஆண்டு நடந்த உலகக் கண்காட்சியில் முதல்முறையாக கோன் ஐஸ்கிரீம்கள் அறிமுகமாகின.

அமெரிக்காவில் ஜூலை மாதம், ஐஸ்கிரீம் மாதமாக கொண்டாடப்படுகிறது.

மிகப்பெரிய கோன் ஐஸ்கிரீம் இத்தாலியில் தயாரிக்கப்பட்டது. அதன்உயரம் 9 அடி.

ஆண்டுதோறும் 15 பில்லியன் லிட்டர் ஐஸ்கிரீமை மக்கள் சாப்பிடுகிறார்கள்.

SCROLL FOR NEXT