சில வகை பட்டாம்பூச்சிகள் 12 அங்குலம் வரை வளரும்.
சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களை மட்டுமே பட்டாம்பூச்சிகளால் பார்க்க முடியும்.
பட்டாம்பூச்சிகளால் மணிக்கு 12 மைல் முதல் 25 மைல் வேகத்தில் பறக்க முடியும்.
அண்டார்டிகா கண்டத்தைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் பட்டாம்பூச்சிகள் உள்ளன.
உலகில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகை பட்டாம்பூச்சிகள் உள்ளன.
பிரிம்ஸ்டோன் எனப்படும் பட்டாம்பூச்சி, மிக அதிகபட்சமாக 10 மாதங்கள் வரை உயிர்வாழும்.
தங்கள் உடல் வெப்பநிலை 86 டிகிரி பாரன்ஹீட்டுக்கு கீழ் குறைந்தால் பட்டாம்பூச்சிகளால் பறக்க முடியாது.
பெரும்பாலான பட்டாம்பூச்சிகள், தங்கள் கால்களின் மூலம் சுவைகளை அறியும்.
பட்டாம்பூச்சிகள், தங்கள் உடலில் உள்ள சிறு துளைகள் மூலம் மூச்சுவிடும்.
பட்டாம்பூச்சிகளால் 12 அடி தூரம் வரை பார்க்க முடியும்.