வலைஞர் பக்கம்

பளிச் பத்து 12: கார்

செய்திப்பிரிவு

உலகின் முதல் கார், கார்ல் பென்ஸ் என்பவரால் 1885-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது.

பென்ஸால் உருவாக்கப்பட்ட முதல் காரின் வேகம், மணிக்கு 15 கிலோமீட்டராக இருந்தது.

உலகில் தற்போது சுமார் 1.2 பில்லியன் கார்கள் உள்ளன.

ஒவ்வொரு காரிலும் சுமார் 30 ஆயிரம் உதிரி பாகங்கள் உள்ளன.

உலகில் அதிகமான கார்களை சீனா தயாரிக்கிறது. 2019-ம் ஆண்டில் சீனாவில் 25.7 மில்லியன் கார்கள் தயாரிக்கப்பட்டன.

உலகில் உள்ள கார்களில், நான்கில் ஒரு பங்கு கார்கள் அமெரிக்காவில் உள்ளன.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் மக்களின் எண்ணிக்கையைவிட அதிக அளவில் கார்கள் உள்ளன.

கார்களில் பயணிப்பவர்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் ஏர் பேக்குகள்1974-ம் ஆண்டில் அறிமுகமானது.

16 சதவீத கார் உரிமையாளர்கள் தங்களின் கார்களை கழுவுவதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

கார் பார்க்கிங் செய்ய அதிக கட்டணம் வசூலிக்கும் நகரமாக லண்டன் உள்ளது.

SCROLL FOR NEXT