எம்.பி.ஏ., முடித்த கையோடு ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் அந்தனா. அவர் பணியாற்றிய நிறுவனத்தில் புராஜெக்ட் தாமதமாகிக்கொண்டிருக்கிறது. ஒரு மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவான அவருக்கு வெளியேற வேண்டிய தவிர்க்க இயலாத சூழ்நிலை. அப்பா பிஸினஸ் ரைஸ் மில் மெஷின்ஸ் வியாபாரம். தங்கை டாக்டர்.
''மழை தொடங்கினபோது மிலிட்டரி கண்டோன்மெண்ட் ஏரியாங்கறதால மின்சார பிரச்சனை வரலை. அதனால் தண்ணீர் பிரச்சனையும் இல்லை. நவம்பரைப் பொறுத்தவரை எந்த ப்ராப்ளமும் இல்லை. ஆனால் டிசம்பர் 1,2,3,லிருந்துதான் பிரச்சனையே.
நோ நெட்வொர்க் வித் எலக்ட்ரிசிடி. ஒலிம்பியா போற பகுதியிலதான் பாதிப்பு அதிகமா இருந்தது. நாங்கள் இருந்த பகுதியில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை. புரொவிஷன்ஸ் ஸ்டோர்கூட திறந்திருந்தது.
நந்தம்பாக்கம் பொறுத்தவரை ரைட்ல ஆத்தோரப் பகுதி குடியிருப்புகளுக்கு பெரிய பாதிப்பு இருந்தது. ஆனா செயின்ட் தாமஸ் மவுண்ட்ல டிசம்பர் 2 லிருந்து 4 வரைக்கும் அந்த பாதிப்பு தொடர்ந்தது. சின்ன வயசிலருந்தே இந்தமாதிரி பொதுசேவையில ஆர்வம் உண்டு.
ஆனா நமக்கு உகந்த அமைப்புகள் இல்லை. அப்புறம்தான் சென்னை ரைசிங் பத்தி தெரிஞ்சிகிட்டேன். பேப்பர்ல பாத்தப்புறம்தான் சேப்பாக்கத்துல ஸ்டேடியத்துல நடக்கற இந்த நிவாரண முகாம்ல வந்து சேர்ந்தேன். 10ஆம் தேதியில இருந்து இங்க தினமும் வந்துர்றேன்.
9ஆம் தேதி ராமாவரம் போயிருந்தேன். ஏற்கெனவே எங்க ஏரியாவுல பக்கத்து பக்கத்து வீட்ல இருந்தவங்க அவங்க. கொஞ்சநாளைக்கு முன்னாலதான் ராமாவாரம் சிஃப்ட் ஆனாங்க. வெள்ள நேரத்துல எந்தவிதமான காண்டக்ட்டும் கிடையாது. சரி இப்பவாவது அவங்களை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்றலாம்னு போனேன்.
அவங்க இப்பவும் சிரமத்துக்கிடையிலதான் இருக்காங்க. இவ்வளவு நாள் 2வது மாடில வேறொரு வீட்ல தங்கியிருந்தவங்க இப்பதான் கிரவுண்ட் ஃப்ளோர் வந்தாங்க. வேலைக்கும் போகவர்ற ஆரம்பிச்சிருக்காங்க. இனி பிரச்சனையில்ல, வரலைன்னிட்டாங்க.
இங்கே பொறுத்தவரைக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. அடுத்தவங்களுக்கு உதவணும்ங்கற நல்ல ஃப்ரண்ட்ஸ்ங்க நிறைய பேர் இங்க கிடைச்சிருக்காங்க. யாருமே டைம்மை வேஸ்ட் பண்றதில்லை. நிறைய ஸ்பான்சர் வர்றாங்க. இங்கே கொடுத்தா போய் சேரும்னு நெனைக்கறாங்க.
அதைப் பாக்கும்போது நமக்கும் ஒரு மனத்திருப்தி. எங்க ஆபீசர், எங்க ஸ்டாப் எல்லாம் நிறைய உதவிகள் செஞ்சிகிட்டு இருக்காங்க. ஆனா இங்க வந்து செய்யக்கூடிய உதவிகளைப் பாக்கும்போது நேரடியா மக்களோட அவங்க கஷ்டநஷ்டத்துல பங்கெடுத்துக்கற மாதிரி ஃபீலீங் கிடைச்சிருக்கு...'' என்று மனநிறைவை மகிழ்ச்சியோடு வெளிப்படுத்தினார் அந்தனா.