குப்பைகளை அகற்றுவது, பொருட்களை அடுக்குவது, வரும் மக்கள் வரிசையை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட வேலைகளில் பம்பரமாகச் சுழன்றுகொண்டிருக்கிறார் வில்லியம் டேனியல். சீருடையைப் பார்த்த பின்புதான் அவர் காவலர் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
சிறப்பு காவல் ஆய்வாளரான வில்லியம் டேனியல் உடன் பேசியதில் இருந்து...
"சுமார் 10 நாட்களாக இங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். வெளியில் இருந்து ஏராளமான பொருட்கள் இங்கே வந்துகொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் முறையாகப் பிரித்து அடுக்கி, தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்து வருகிறோம். தன்னார்வலர்களும் இங்கே வந்து பெற்றுச் செல்கிறார்கள். இந்த வேலைகளைச் செய்வதில் மிகுந்த சந்தோஷம் எனக்கு.
என்னுடைய வீட்டில் மனைவி அரசு மருத்துவமனையில் வேலை பாக்கறாங்க. அவங்க மக்களுடைய உடல்நலத்தைப் பாத்துக்கறாங்க. நான் இங்கே நிவாரண முகாமைப் பாத்துக்கறேன். எங்களை நிச்சயம் கடவுள் பாத்துப்பார் அப்படிங்கற நம்பிக்கை இருக்கு!"
பாத்துக்குவார்தானே?