வலைஞர் பக்கம்

மழை முகங்கள்: துயரைப் பார்த்து அப்பாவுடன் களத்தில் இறங்கிய மகன்கள்!

பால்நிலவன்

'தி இந்து' நிவாரண முகாம் நெகிழ்ச்சிப் பதிவுகள்

இரு சகோதரர்கள் சுறுசுறுப்பாக நிவாரணப் பொருட்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தனர். உற்சாகமாக ஈடுபட்டிருந்த அவர்கள் சிறிது இளைப்பாறியபோது பேசினோம்.

கீழ்க்கட்டளை அருகேயுள்ள கோவிலம்பாக்கம்தான் சொந்த ஊர். அப்பா சிவில் என்ஜினியர். அம்மா லைட் மியூசிங் சிங்கர். அவர்களில் அண்ணன் கிரண் பேசத் துவங்கினார்.

''காமாட்சி ஆஸ்பிடல் பக்கத்துல பாலாஜி நகர்ல எங்க வீடு... அந்த பக்கம் எல்லாம் ஃப்ளாட்ஸ், அப்பார்ட்மெண்ட்ஸ்தான். 15 அடி உயரத்துல தண்ணி வந்ததால கிட்டத்தட்ட எல்லா கட்டிடங்கள்ளேயும் ஃபஸ்ட் ஃப்ளோர்ல தண்ணி வந்துடிச்சி..

அதுக்குமேலே அங்க இருக்கமுடியாத மக்கள் அந்தந்த அப்பார்ட்மெண்ட்ல ரெண்டாவது மாடிக்கு ஷிப்ட் ஆகிட்டாங்க. இதனால சாப்பாடில்லாம அவங்க அவஸ்தைப் பட்டபோது ஹெலிகாப்டர்ல சாப்பாடு வந்தது. ஆனா இண்டிரீயரா அது போய் சேரலை. அன்னிக்கு எங்க வீட்ல 100 பேருக்கு சமைச்சு எல்லோருக்கும் கொண்டுபோய் கொடுத்தோம்.

அவனைத் தொடர்ந்து தம்பி சாய்கிரண்''அரசாங்கம் ஒரு படகு கொடுத்தது. மீனவர்கள்கிட்ட இருந்து 2 படகுகளை நாங்க வாடகைக்கு எடுத்தோம். வீட்ல செஞ்ச உணவை கொண்டுபோய் எல்லாருக்கும் விநியோகிச்சோம். அதப் பாத்தவர்கள் சில பொருள்களை எங்களிடம் கொடுத்து கொடுக்கச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.

பொருள் எல்லோரும் கொடுத்துவிடலாம். ஆனால் அதைக்கொண்டுபோய் சேர்ப்பது யார்? என்ற கேள்வி எங்களுக்கு தொடர்ந்து இருந்துவந்தது. அப்போதுதான், 'தி இந்து' பேப்பர்ல தன்னார்வலர்கள் தேவைன்ற அறிவிப்பைப் பார்த்த பிறகு ஒரு நம்பிக்கை வந்தது. உடனே இன்னிக்கு அப்பா, நான், அண்ணன் மூனுபேரும் கௌம்பி வந்தோம். காலைல இருந்து இங்க உதவிகள் செஞ்சிகிட்டிருக்கோம்.

இங்க ரொம்ப உற்சாகமாக இருக்கு. இந்தமாதிரி நாலு பேரு கூடி எல்லாம் ஒன்னு சேர்ந்து பொதுவேலைகளை செய்யறது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு" என்று கூறிய பிறகு மீண்டும் தனது பணிகளை அவர்கள் தொடரச் சென்றனர்.

SCROLL FOR NEXT