வலைஞர் பக்கம்

இன்று அன்று | 1956 டிசம்பர் 22: விலங்குகள் பூங்காவில் பிறந்த முதல் கொரில்லா!

சரித்திரன்

கொரில்லாக்கள் பிரம்மாண்டமான உருவம் கொண்டவை. எனினும் பரம சாதுக்கள்; சைவ பட்சிணிகள். புத்திக்கூர்மை மிக்க இந்தக் குரங்குகள், ஆப்பிரிக்கக் காடுகளிலிருந்து பல நாடுகளுக்குக் கடத்திச் செல்லப்படுகின்றன.

குட்டிக் குரங்குகள் பழக்குவதற்கு எளிதானவை என்பதால், அவற்றைப் பிடிக்கவே வேட்டைக்காரர்கள் ஆர்வம் காட்டினர். அதற்காக, அக்குட்டிகளின் பெற்றோர்களைக் கொன்றழிப்பது வழக்கமாக இருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் விலங்குகள் பூங்காவில், 1956 டிசம்பர் 22-ல், மில்லி மற்றும் மேக் எனும் கொரில்லா தம்பதிக்கு கோலோ எனும் பெண் கொரில்லாக் குட்டி பிறந்தது. விலங்குகள் பூங்காவில் பிறந்த முதல் கொரில்லா அதுதான்.

அதன் பின்னர், கொலம்பஸ் பூங்காவில் மட்டும் இதுவரை 30 கொரில்லாக் குட்டிகள் பிறந்திருக்கின்றன. இன்றும் உயிருடன் இருக்கும் கோலோ பேரன், பேத்திகளுடன் வாழ்ந்துவருகிறது!

SCROLL FOR NEXT