வலைஞர் பக்கம்

முழுமையாக தயாரான பிறகே பாடல்களைப் பாடுவேன்: வெற்றி ரகசியத்தை சொல்லும் எஸ்.பி.பி

செய்திப்பிரிவு

“நான் முழுமையாக தயாரான பிறகுதான் ஒரு பாடலை பாடத் தொடங்குவேன்” என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறி யுள்ளார்.

பிரபல சினிமா பின்னணி பாடக ரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் திரைத் துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. 1966-ம் ஆண்டில் தெலுங் கில் வெளியான ‘   மரியாத ராமண்ணா’ படத்தின் மூலம் அறிமுக மான இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 15 மொழிகளில் ஆயிரக் கணக்கான பாடல்களை பாடியுள்ளார். தனது இசைப் பயணம் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியதாவது:

இத்தனை ஆண்டுகளாக நான் சினிமாவில் நீடித்திருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்த தொழிலின் மீது நான் கொண்டுள்ள பற்றுதான் நான் இத்தனை நாட்கள் நீடித்திருப்பதற்கு காரணம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு நாளையும் என் வாழ்க்கையின் திருப்புமுனையான நாளாகவே கருதுகிறேன். இருப்பினும் ‘சங்கராபரணம்’, ‘ஏக் துஜே கே லியே’ ஆகிய படங்கள் எனக்கு பெரிய அளவில் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது.

என்னுடைய வேலையை மிகுந்த ஈடுபாட்டோடு செய்துள்ளேன். ஸ்டுடி யோவில் 5 மணிக்கு ஒரு பாடலை ரெக்கார்டிங் செய்யவேண்டும் என்றால் அதற்கு முன்பே நான் என்னைத் தயார் படுத்திக்கொள்வேன். நான் முழுமையாக தயாரானப் பிறகுதான் மைக்கைப் பிடித்து ஒரு பாடலை பாடத் தொடங்குவேன். பெரிய இயக்குநர், சிறிய இயக்குநர் என்றெல்லாம் நான் பாகுபாடு காட்டியதில்லை.

50 ஆண்டுகளாக பாடிக்கொண்டிருந் தாலும், இன்னும் முழுமையாக கர்னாடக இசையை கற்றுக்கொள்ளவில்லை என்பதிலும், என்னுடைய பொறியியல் படிப்பை முடிக்கவில்லை என்ப திலும் எனக்கு வருத்தம் உள்ளது. அதேபோல நாளொன்றுக்கு சுமார் 11 மணிநேரம் பாடுவதில் பிஸியாக இருந்ததால் என் குழந்தைகளை அருகில் இருந்து கவனிக்க முடியவில்லை என்பதிலும் எனக்கு வருத்தம் உள்ளது.

புகழ்பெற்ற பாடகர் முகமது ரஃபியின் பாடல்களை கேட்டுத்தான் நான் வளர்ந்தேன். அவரிடம் இருந்துதான் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

இவ்வாறு எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT