இந்தியாவில் இன்றைய தேதியில் சகிப்புத் தன்மையின் அவசியம் குறித்து பெரிய அளவில் விவாதம் நடந்துவருகிறது. நவம்பர் 16-ஐ உலகச் சகிப்புத்தன்மை நாளாக அனுசரிப்பதாக 1995-ல் ஐ.நா. அறிவித்தது நம்மில் பலருக்கு நினைவிருக்காது.
‘இயற்கையாகவே மனிதர்களில் பல்வேறு பிரிவினர் இருக்கிறார்கள். உலகின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு பிரிவினர் ஒற்றுமையாக வசிக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி சகிப்புத்தன்மைதான்’ என்று ஐ.நா. அறிவித்தது. மனித உரிமை தொடர்பான சட்டங்களை முறையாகக் கையாள்வது, வெறுப்புக் குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் தகுந்த தண்டனை வழங்குவது, பிரச்சினைகள் ஏற்படும் சமயங்களில் சட்டத்தைக் கையிலெடுத்துக்கொண்டு பொதுமக்களே நடவடிக்கைகளில் இறங்குவதைத் தடுப்பது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் ஐ.நா. அறிக்கையில் இடம்பெற்றன.
ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் விழாக்கள் உலகமெங்கும் நடத்தப்படுகின்றன.