வலைஞர் பக்கம்

இன்று அன்று | 1947 அக்டோபர் 26: இந்தியாவுடன் இணைய சம்மதித்தார் காஷ்மீர் ராஜா!

சரித்திரன்

விடுதலை மற்றும் பிரிவினைக்குப் பின்னர் காஷ்மீர், இந்தியாவுடன் இணைவதா பாகிஸ்தானுடனா என்று சமஸ்தானங்கள் முடிவெடுக்க வேண்டிய நிலை வந்தது.

இருநாடுகளுடனும் இணையாமல் தனி நாடாகவே இருக்க வேண்டும் என்று காஷ்மீர் மன்னர் ஹரி சிங் விரும்பினார். காஷ்மீருக்குள் பாகிஸ்தானின் பதான் இன வீரர்களும், பாகிஸ்தான் ராணுவத்தினரும் காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர்.

இந்தியாவுடன் இணைந்துகொண்டால் ராணுவ உதவிகள் செய்யப்படும் என்று இந்தியாவின் கடைசி (ஆங்கிலேய) வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் கூறியிருந்தார்.

ஸ்ரீநகரை நோக்கி பதான் படைகள் முன்னேறிக்கொண்டிருந்தன. இந்த இக்கட்டான நிலையில், இந்தியாவின் உதவியைக் கோர முடிவெடுத்தார் ஹரி சிங்.

“எனது பிரதேசத்தில் மோசமான நெருக்கடி நிலை உருவாகியிருப்பதை உங்களுக்குத் தெரிவிப்பதுடன் அரசின் உடனடி உதவியையும் கோருகிறேன்” என்று தொடங்கும் கடிதத்தை 1947 அக்டோபர் 26-ல் எழுதினார். இந்திய உதவி கிடைத்தது. காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.

SCROLL FOR NEXT