வலைஞர் பக்கம்

இன்று அன்று | 9 அக்டோபர் 1967: புரட்சியின் மறுபெயர் சே!

சரித்திரன்

இளைஞர்களின் நாடி நரம்புகளில் கனல் பாய்ச்சும் பெயர் சே குவேரா. 1928-ல் அர்ஜென்டினாவில் பிறந்த அவர் கியூபா நாட்டு விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்தார்.

மருத்துவம் படித்துச் சொகுசான வாழ்க்கை வாழ வாய்ப்புகள் இருந்தும் மக்களின் இன்னல்களைக் களையப் போராளியாக மாறினார். 1954-ல் ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் அவருடைய தம்பி ரவுல் காஸ்ட்ரோவை மெக்சிகோவில் சந்தித்தார். உலகின் சர்வாதிகாரம் படைத்த வட அமெரிக்காவுக்கு ஃபிடல் காஸ்ட்ரோவும், சே குவேராவும் கடும் சவாலாக இருந்தனர். கெரில்லா தாக்குதல் மூலம் பாடிஸ்டாவின் ராணுவத்தை வீழ்த்தி 1959-ல் ஃபிடல் காஸ்ட்ரோ கியூபா பிரதமர் ஆனார்.

`லா கபானா’ கோட்டை சிறைச்சாலையின் பொறுப்பாளர் ஆனார். கியூபாவின் நிதியமைச்சராகவும், கியூபா தேசிய வங்கியின் தலைவராகவும் பதவி வகித்தார். புரட்சிக்கு எல்லைகள் இல்லை என்று நினைத்த சே குவேரா, காங்கோவில் புரட்சிப் படைகளுக்கு உதவினார். பின்னார் பொலிவியாவுக்குச் சென்றார். அங்கு ஆஸ்துமா பாதிப்பால் இருந்தவரை 1967 அக்டோபர் 8-ல் சுற்றிவளைத்தது சி.ஐ.ஏ. பயிற்சி பெற்ற பொலிவியப் படை. பள்ளி ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த சே, அக்டோபர் 9-ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

SCROLL FOR NEXT