சங்கீத உலகின் பிதாமகர் தியாகராஜரின் வாழ்க்கைச் சரிதம் மேடையில் இசை நாடகமாக வெளிவர உள்ளது. வீயெஸ்வி, பாம்பே ஜெய, டி.வி.வரதராஜன் ஆகியோர் மேற்பார்வையில் யுனைடெட் விஷுவல்ஸ் தயாரிக்கவுள்ள தியாகராஜர் இசை நாடகம் டிசம்பர் 1-ம் தேதி மாலை 6.30 மணிக்கு நாரத கான சபாவில் அரங்கேறவுள்ளது.
2 மணி நேரம் நிகழ்த்தப்படும் இந்த இசை நாடகத்துக்கு வசனம் எழுதும் பொறுப்பை ஆனந்த விகடன் முன்னாள் நிர்வாக ஆசிரியரும், பிரபல இசை விமர் சகருமான வீயெஸ்வி ஏற்றுள் ளார். முதல்முறையாக மேடை நாடகத்துக்கு வசனம் எழுதவுள்ள இவர், இந்த இசை நாடகம் குறித்து கூறும்போது, “தியாகராஜரின் வாழ்க்கைச் சரிதத்தைப் பின்பற் றியே வசனங்கள் அமைந்துள் ளன. இசை நாடகமாக இருப்ப தால் இதில் இசையின் பங்கு அதிக மாகவும், வசனத்தின் பங்கு குறைவாகவும் இருக்கும்” என்றார்.
இசைப் பணியில் அடிப்படை களை மீறாமல் புரட்சி செய்யும் பாம்பே ஜெய இந்த நாடகத்தின் இசைப் பணியை ஏற்றுக்கொண்டுள்ளார். “தியாக ராஜரின் பஞ்சரத்ன கிருதிகள், இந்த இசை நாடகத்தில் உண்டு. அப்பாவும், பெண்ணும் பேசுவது போல காட்சிகள் அமையவுள்ள இந்த இசை நாடகத்தில் தியாக ராஜரின் பிரபலமான கிருதிகளில் சுமார் 25 கிருதிகள் இடம்பெறும்” என்கிறார் ஜெய.
தியாகராஜரின் குரலுக்கு மதுரை சேர்த்தலை ரங்கநாத சர்மாவும், பெண் குரலுக்கு பாம்பே ஜெய உட்பட அவரது இசைக் குழுவினரும் பாட உள்ளனர். இதில் தியாகராஜராக நடிக்கும் டி.வி.வரதராஜன், தியாக ராஜரின் நாட்கள் எல்லாம் பேசும் பொழுது உரைநடையாகவும், பாடும்போது கிருதிகளாகவும் இருந்தன என்கிறார். அவர் எந்த நேரத்தில், எந்த சம்பவத்தின் போது குறிப்பிட்ட பாடலைப் பாடியிருப்பார் என்பதை யூகித்து அப்பாடலின் பொருள் உணர்ந்து இந்த நாடகம் எழுதப்பட்டுள்ளது.
தியாகராஜரின் இசைப் பயண மாக அமைய உள்ள இந்த நாடகத்துக்கு 2007 ம் ஆண்டு வீயெஸ்வி எழுதி வெளியிட்ட தியாகராஜர் குறித்த புத்தகமே அடிப்படையாக அமைந்துள்ளது.
தியாகராஜரின் பல பிரபல மான கிருதிகளைக் கொண்டு அமைந்துள்ள தியாகராஜர் இசை நாடகத்தில் ராமர், சீதை, லட்சு மணர், ஆஞ்சநேயர் ஆகிய புராண கதாபாத்திரங்களும் உள்ளன. தெலுங்கு கிருதிகள் எழுதிய தியாகராஜர் இசை நாடகத்தில் தமிழ்ப் பாடல் ஒன்று இருக்க வேண்டும் என்பதற்காக கோபாலகிருஷ்ண பாரதியும், தியாகராஜரும் சந்திப்பது போன்ற காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.