செருப்புக்கடைக்கு ஒருவர் சென்றார். பணியாளர் அவரை வரவேற்று அழைத்து, செருப்பை எடுத்துக் காட்டினார். அவரை அமர வைத்து அவர் காலடியில் அமர்ந்து ஒவ்வொரு செருப்பாக அணிவித்துக் காட்டினார். வந்தவருக்கு சங்கடமாக இருந்தது. ‘நானே போட்டு பார்க் கிறேன்’ என்றார். பணியாளர் விடவில்லை. அவரே ஒவ்வொரு செருப்பாக எடுத்து போட்டுக் காட்டினார்.
வந்தவர் பெருந்தன்மையாக சொன்னார், “அய்யா... நானும் மனிதன்... நீங்களும் மனிதன்.. என் கால்களை நீங்கள் தொடுவது எனக்கு ஒருமாதிரி இருக்கிறது.”
அதற்கு பணியாளர் சிரித்தபடி, “இந்த கடைக்கு வெளியே போய்விட்டால், ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் உங்கள் கால் களை தொடமாட்டேன்.. அது என் சுய மரியாதை! கடைக்குள் நீங்கள் ஒரு கோடி கொடுத்தாலும், உங்களுக்கு உதவுவதை நிறுத்த மாட்டேன். இது என் தொழில் மரியாதை” என்றார்.