வலைஞர் பக்கம்

நெட்டிசன் நோட்ஸ்: வடிவேலு பிறந்த நாள் - இந்த யுகத்தின் கலைஞன்

செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவின் சிறந்த நகைசுவை நடிகரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான வடிவேலு இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்களை இணையத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன. அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Rajkumar

நகைச்சுவை நாயகன் நமது தலைவர் வடிவேலு அண்ணாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சையத் மஹபூப்

நகைச்சுவை புயல் வடிவேலு அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

உடல் மொழியால் உள்ளங்களை கவர்ந்த கலைஞன்...

சீக்கிரம் வா அண்ணா, உன் இடத்தையெல்லாம் நிர்ப்ப இங்க ஆளே இல்லை... உன்னை மீம்ஸ்-ல பாக்குறதுல்லாம் பத்தல... வெள்ளித்திரையில பாக்கணும்....

M N HARIHARASUDHAN

என்னை அனுதினமும் சிரிக்க வைக்கும் கலைஞர். அவர் இச்சேவையை உலகிற்கு தொடர மகிழ்ச்சியுடனும், நலமுடனும் வாழ்க பல்லாண்டு என இறைவன் அருள் செய்வார்.

tamilinfobooth

நகைச்சுவை அரசர் வடிவேலு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் .#HBDVadivelu

SCROLL FOR NEXT