வலைஞர் பக்கம்

செல்போனை தொலைத்த காவலர்; கண்டுபிடித்து ஒப்படைத்த வழக்கறிஞர்- மதுரையில் சுவாரஸ்யம்

என்.சன்னாசி

மதுரை ரயில் நிலையத்தில் 2 நாட்களுக்கு முன்பு ரயில்ப் பயணிகள், பணியாளர்கள் மற்றும் போலீஸாருக்கு ரெட் கிராஸ்அமைப்பினர் கபசுர குடிநீர் வழங்கினர்.

இதில் ஈடுபட்ட வழக்கறிஞர் முத்துக்குமார், அப்பகுதியில் கீழே கிடந்த ஆன்ராய்டு செல்போன் ஒன்றை கண்டெடுத்தார். அது யாருக்குச் சொந்தமானது எனத் தெரியாமல் ரெட்கிராஸ் அமைப்பினரிடம் விசாரித்தார்.

சிறிது நேரத்தில் அதே செல்போனில் ஒருவர் பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய நபரின் அழைப்பை ஏற்று பேசியபோது, ரயில் நிலைய பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த மதுரை மாநகர குற்றப் பிரிவு காவலர் ஒருவர் பயன்படுத்திய காவல்துறைக்கு சொந்தமானது எனத் தெரியவந்தது. ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள அந்த செல்போனை பணியின்போது, எதிர்பாராதவிதமாக அவர் தவறவிட்டதும் தெரிந்தது.

உடனே அவரை வரவழைத்து, ரெட் கிராஸ்அமைப்பினர் முன்னிலையில் செல்போனை காவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. குற்றச் சம்பங்களை தடுக்கும் நோக்கில் மாநகர காவல்துறை மூலம் அளிக்கப்பட்ட குரூப்( CUG) அந்த செல்போனில் பல்வேறுமுக்கிய ஆதாரங்கள் பதிவு செய்து இருப்பதாகவும் தெரிந்தது.

தொலைந்த செல்போனை கண்டுபிடித்து ஒப்படைத்த மனித நேய வழக்கறிஞர், ரெட் கிராஸ் அமைப்பினருக்கு அந்த காவலர் நன்றி தெரிவித்தார்.

கடந்த மூன்று மாதத் திற்கு முன், சாலையில் கிடந்த பல லட்சரூபாயை போலீசாரிடம்ஒப்படைத்து, உரியவரிடம் சேர்த்தவர் முத்துக்குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT