வலைஞர் பக்கம்

இது காதலர் வாரம்: முதல் நாள் ரோஜா தினம்

செய்திப்பிரிவு

உலக காதலர் வாரம் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்குகிறது. இதில் முதல் தினமான இன்று (பிப்.7) ‘ரோஸ் டே’, அதாவது ரோஜா தினம் என்று கொண்டாடப்படுகிறது.

ரொமான்டிக் வாரத்தின் முதல் நாள் பிப்.7-ம் தேதி ரோஜா தினம்.
பிப்.8-ம் தேதி காதலை முன்மொழியும் தினம் (Propose day)
பிப்.9-ம் தேதி சாக்லேட் தினம் (Chocolate day)
பிப்.10-ம் தேதி டெட்டி தினம் (teddy day)
பிப்.11-ம் தேதி வாக்குறுதி தினம் (Promise Day)
பிப்.12-ம் தேதி தழுவுதல் தினம் (Hug Day)
பிப்.13-ம் தேதி முத்த தினம் (kiss day)

இந்த தினங்கள் உலகெங்கும் காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ரோஜா தினமான இன்று ரோஜாப் பூக்களைப் பரிசுகளாக வழங்கும் தினம். காதலின் பிணைப்பைத் தெரிவிக்கும் அன்பின் குறியீடாகும். வெறும் ரோஜாப் பூக்கள் பரிமாற்றம் அல்ல, அன்பின் பரிமாற்றம், காதல் வாழ்த்துகளின் பரிமாற்ற தினமாகும் இது.

இதோ உங்களுக்கான சில ரோஜா தின வாழ்த்துகள்:

அனைத்து ரோஜாக்களும் உனக்குத்தான். உன்னில் அனைத்து ரோஜாக்களையும் நான் காண்கிறேன். ரோஜா தின வாழ்த்துகள்.

என்னுடைய இதயம் உனக்காக மட்டுமே துடித்துக் கொண்டிருக்கிறது. ஹேப்பி ரோஸ் டே!

உன் அழகின் முன்னால் ஆயிரம் ரோஜாக்களும் ஒன்றுமில்லை.. ஹேப்பி ரோஸ் டே!

உன் காதல் எனும் வாசனையால் என் வாழ்க்கையை நிரப்பி விட்டாய்.. ரோஜா தின வாழ்த்துகள்!

ரோஜா இல்லாத தோட்டமும், நீ இல்லாத என் வாழ்க்கையும் வறட்சிதான்.. ஹேப்பி ரோஸ் டே மை ரோஸ்!

ரோஜாப் பூங்கொத்துகள் எத்தனை அழகோ அதே போல் உன் வாழ்க்கையையும் அழகாக கடவுள் மாற்றட்டும்.. இனிய ரோஜா தின வாழ்த்துகள்.

ரோஜாவுக்கே ரோஜாப்பூக்களை அன்பளிப்பாக அனுப்ப வெட்கப்படுகிறேன் தோழி.. ஹேப்பி ரோஸ் டே!

நம்மிடையே நிலவும் பரஸ்பர அன்பு முள்ளில்லா ரோஜாவாக செழிக்கட்டும்- ரோஸ் தின வாழ்த்துகள்!

கடவுளிடம் நான் கேட்டதென்னவோ ரோஜாப் பூக்கள்தான். அவரோ உன்னையே எனக்கு அளித்து விட்டார்.. ஹேப்பி ரோஸ் டே!

உன்னுடைய நினைவே என் இதயத்தின் அடியாழத்தில் ரோஜாக்களை மலரச் செய்கிறதே! ஹேப்பி ரோஸ் டே டியர்!

அன்பில் அரவணைப்பும் காதலும் பெரிதுதான்.. ஆனால் அதைவிடவும் பெரிது இந்த ரோஜாக்களே- ஹேப்பி ரோஸ் டே!

- நித்திலகுமாரன்

SCROLL FOR NEXT