வலைஞர் பக்கம்

இணைய கலாய்ப்பாளர்களை கலங்கவைத்த விஜயகாந்த்!

செய்திப்பிரிவு

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் எல்லா அசைவுகளும் பேச்சுகளும் 'மீம்கள்' வாயிலாக இணைய கலாய்ப்பாளர்களால் நையாண்டிக்கு உள்ளாவது அதிகம். அவற்றில் பெரும்பாலானவை உள்நோக்கம் இன்றி, நகைச்சுவை தொனியே மலிந்திருக்கும் என்பார்கள் இணைய ஆர்வலர்கள்.

அத்தகைய மீம்மக்களை கலங்கவைத்துவிட்டார் விஜயகாந்த். அப்துல் கலாமும் இறுதி அஞ்சலி செலுத்திய நிகழ்வில், தன்னிலை மறந்து மன உருக்கத்தை கலங்கிய கண்களுடன் அனிச்சையாக வெளிப்படுத்தியதே இந்த கலங்கடிப்புக்குக் காரணம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் அரசியல் தலைவராக இல்லாமல், தன் மனத்தில் இருப்பதை அப்படியே வெளிப்படுத்தும் அரசியல் மனிதர் இவர் என்று இணைய கலாய்ப்பாளர்கள் புகழாரம் சூட்டினர். அத்தைய மீம்களின் தொகுப்பு இது...

SCROLL FOR NEXT