சுமார் 3 ஆண்டுகள், பலரின் உழைப்பைக் கொட்டி எடுக்கப்பட்ட பிரம்மாண்ட திரைப்படம் பாகுபலி, நேற்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. 'நான் ஈ' படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ராஜமெளலி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் பிரபாஸ், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், ரூ. 250 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு,சுமார் 4,000 திரையரங்குகளில் திரையிடப்பட்டிருக்கிறது. பாகுபலி படத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் பதிவிட்டு வரும் கருத்துகள் இன்றைய ட்வீட்டாம்லேட்டில்..
shadow @nandha @nandhakumareng - டைட்டில்'ல இருந்தே ராஜமௌலி'யின் அதகளம் ஆரம்பிக்கிறது! #பாஹுபலி
Muthiah @muthiahrm - அனுஷ்கா ரசிகர்கள் 2016 வரை வெயிட் செய்ய வேண்டும் போல! #பாகுபலி
பஞ்சமி @sri_gdos - அது பாஹூபலி என்றிருக்க வேண்டும்.
பாஹூ - தோள்,
பலி - வலிமையானவன்.
பாஹுபலி - தோள் வலிமைமிக்கவன்..
Dr.எட்டு @8tttuu - படம் உச்சகட்டத்தை அடையும்போது தொடரும் போட்டாய்ங்க... #பாகுபலி
கனவுத்திருடன் @im_karthikrasa - #பாகுபலி இடைவேளை... கதையை முதலிலேயே சொல்லிவிட்டு மெதுவாக, ஆனால் சலிப்படைய வைக்காமல் அதை நோக்கிய நடையுடன், அருமை.
Prakash @ராட்டை - முதல் பாதி ஆசம், மார்வலஸ், பக்கா..
அப்போ 2-ம் பாதி?
ங்ஞே. முதல் பாதியத்தான் 3 மணிநேரம் ஓட்னானுங்க. #பாகுபலி
ஜெயந்த் கிருஷ்ணா @porukkiJK - நடிகர்கள், பிரம்மாண்டம், கிராபிக்ஸ் என்பதையெல்லாம் தாண்டி ராஜமெளலி என்ற ஒற்றை மனிதனின் மீதுள்ள நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மட்டுமே #பாகுபலி
Dr.எட்டு @8tttuu - தமிழ் ரசிகர்களுக்காக.. ஒரே ஒரு குத்துப்பாட்டு.. !! #பாகுபலி
The king makeR @MuthubalaK - பிரமாண்டம்னா என்னான்னு ஷங்கருக்கும், சரித்திரப்படம்னா என்னான்னு சிம்புதேவனுக்கும் உணர்த்திய படம்தான் பாகுபலி.
நாட்டுப்புறத்தான் @naatupurathan - கொஞ்சம் ஓவர்டோஸ்ன்ற மாதிரி நண்பரிடமிருந்து தகவல்...!!! #பாகுபலி...!!!
சின்னக் கவுண்டர் @chinna_gounder - 3 வருசம் எடுத்த பாகுபலி'யே இப்படின்னா அப்போ "வாலு" படம்??? #I_cant_wait
Dr.எட்டு @8tttuu - படத்துல காளைய அடக்கிற சீன்.. ராமராஜனுக்கு அவமரியாதை செய்யும் விதமாக.. வில்லனே காளைய அடக்கிர்றாப்புடி.. #பாகுபலி
@1nd1ly 9m - பாகுபலி படத்துல நடிச்சவங்க லிஸ்டை விட தயாரிச்சவங்க லிஸ்ட் பெருசா இருக்கே!
அலெர்ட் ஆறுமுகம் @6_mugam - ராஜா காலத்து படமா இருந்தாலும் சரி, மந்திரி காலத்து படமா இருந்தாலும் சரி குத்து சாங் இல்லாத தெலுங்கு படம் உண்டா???...#பாகுபலி
விண்ணைதாண்டியவன் @IMkaali - 200 கோடில பிரம்மாண்டம் பண்ண பாகுபலி'ய பாராட்டுறீங்க; 30 கோடி மட்டும் போட்டு பிரம்மாண்டமா பண்ண ஆயிரத்தில் ஒருவனை பலர் பார்க்கவேல்ல!
#தமிழன்டா
அதிஷா @athisha - பாகுபலி படத்தின் முடிவில் இரண்டாம் பாகத்தின் சில காட்சிகள் கொண்ட சிறிய டீசரை இன்று முதல் இணைத்திருக்கிறார்களாம்!
லக்கிப்பீடியா @luckykrishna - கதை சொல்றதுக்கு சினிமா என்ன நாவலா அல்லது ரேடியோ ஒலிச்சித்திரமா? பாகுபலி கொடுப்பது அனுபவம். அதை அனுபவிக்கத்தான் முடியும். அனுபவித்தவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். முடியாதவர்கள் வழக்கம்போல ஜல்லியடிக்கிறார்கள்.