சூர்யா வெங்கட்பிரபு கூட்டணியில் அதிக எதிர்பார்ப்புடன் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில், டைட்டில் மாற்றம் அதனால் 2 விதமான போஸ்டர் என பலக் கட்ட குழப்பங்களை ஏற்படுத்தி 'மாசு' திரைப்படம் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியானது.
ட்விட்டரில் வழக்கம்போல படத்தை பார்த்த பார்வையாளர்கள் தங்களது கருத்துக்களைக் கொட்ட ஆரம்பித்துவிட்டனர். 'மாசு' தொடர்பாக படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கலந்து கொட்டிய விமர்சனங்கள் இன்றைய ட்வீட்டாம்லேட்டில்....
SELVA @joe_selva1 - மாசு படம் பார்த்த அப்புறம் பேய் மேல இருந்த மரியாதை போச்சு ...
திரு @thirumarant - சாதாரணமாவே எல்லா படத்தையும் தெறி மாஸ்ன்னு சொல்லுவீங்க... இப்ப மாஸ் படம் வேற பார்க்கப்போறீங்க... ;)))
உளவாளி @withkaran - 2005-கஜினி,2015- மாஸ்.. சூர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் பத்து வருசத்துல வயசு குறைஞ்ச மாதிரிதான் இருக்கு.. என்னத்ததான் திம்பானுங்களோ!!
நாகராஜசோழன் @kandaknd - சூர்யா - மாற்றான் எடுத்து இரட்டையர் கதைய ஒழிச்சாரு, அஞ்சான் எடுத்து டான் கதைகளை ஒழிச்சாரு, இப்போ மாசு எடுத்து பேய்ப் படங்களை ஒழித்தார் #லெஜன்டுடா.
Sarath @sarathjeeva - நயன்தாரா பத்தி எதுமே பேச்சே இல்லையே :-0 #மாசு.
சி.பி.செந்தில்குமார் @senthilcp - சார்.உங்க படம் சீன் பை சீன் நைனா(2002) மாதிரியே இருக்கே? லூஸ் மாதிரி பேசாதே. அதுல ஜெயராம் ஹீரோ. இதுல சூர்யா ஹீரோ # நீ லூஸ்னா நான் பக்கா லூஸ்.
திருச்சி மன்னாரு @TrichyMannaru - #மாசு செகன்ட் ஹாஃப்ல ஆவி சூர்யா வந்து ஒரு கலக்கு கலக்கி படத்தை காப்பாத்திட்டார். செகன்ட் ஹாஃப் பெட்டர் ஹாஃப்..
வேடன்!! :))) @thalarockss - என்னது அடுத்த அஞ்சானா??? பூமி தாங்காது லே!! #மாசு.
திருச்சி மன்னாரு @TrichyMannaru - சூர்யா, வெங்கட்பிரபு கிட்ட காமெடி படம் எடுக்கச் சொன்னா, வெங்கட்பிரபு சூர்யாவ வச்சு செம காமெடி பண்ணிட்டாரு.
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha - #மாஸ்-னு பேரு வெச்சு விளம்பரப்படுத்திட்டு கடைசி நேரத்துல #மாசு னு மாத்துனாலும் மக்கள் மாஸ்னு தான சொல்லுவாங்க.. யாவார தந்திரம்யா இது!
தமிழ்நாட்டு புத்தன் @tamilanarul - படம் எப்படி இருக்குமோ அப்படி டைட்டில் வைக்கிறதுதானே வழக்கம்.
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha - கொஞ்சம் சறுக்கிருந்தாலும் அஞ்சான் ஆகியிருக்க வேண்டியது.. ஜஸ்ட்டு மிஸ் ஒரு நூல் இழையில மிஸ் ஆயிடுறது! #மாஸ்.
தமிழ் குடிமகன் @Tamiltwits - ஸ்லோவா ஸ்டார்ட் ஆச்சு அப்டியே புடிச்சு வழக்கமான வெங்கட்பிரபு பாணில ட்விஸ்ட் கலந்து மாஸ் இண்டர்வல் #மாஸ்.
Saravanan @madhavsaravanan - சிலர் வேண்டுமானால் படம் 'பக்கா #மாஸ்' எனலாம்.எனக்கு படம் ' மொக்க பீஸ் ' ஆகத்தான் தெரிந்தது.
Iyyanars* @iyyanars - இட்ஸ் எ வெங்கட் பிரபு'ஸ் த'மாஸ்' ஃபிலிம்?! #மாஸ்'.
அழகிய தமிழ் மகன் @kaviintamizh - மாசு இல்லா தமிழகம்.. வளமான எதிர்காலம்.. # படம் பார்த்துட்டு எவனும் இப்படி விமர்சனம் பண்ணாம இருந்தா ரொம்ப நல்லது...
பொர்க்கி போயட்டு @LathaMagan - frightnersன்றானுக, Sixth senseன்றானுக. அடேய். இது மாயா பஜார்டா. ஊர்வசி நடிச்சது. #மாசு.