வலைஞர் பக்கம்

ட்வீட்டாம்லேட்: நிதின் கட்கரியும் நம்பர் ஒன் ரியாக்‌ஷன்களும்!

க.பத்மப்ரியா

"செடிகள் செழிப்பாக வளர அவற்றிற்கு சிறுநீரை ஊற்றி வளர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் வீட்டில் செடி வளர்ப்புக்கு இயற்கை முறையிலான உரங்களை உபயோகிக்க வேண்டும்.

நான் எனது டெல்லி வீட்டில் இருக்கும்போது, 50 லிட்டர் கேனில் எனது சிறுநீரை சேகரித்தேன். அதனை வீட்டிலிருந்து செடிகளுக்கு பயன்படுத்தும்படி தோட்டக்காரனிடம் கூறினேன். செடிகளின் அதிகமான வளர்ச்சி இருந்ததை கண்கூடாக பார்த்தேன். சாதாரன தண்ணீரை விட இது அதிக பலனை அளித்தது.

நமது சிறுநீரில் அதிக அளவில் யூரியாவும் நைட்ரஜனும் உள்ளது. அதனால் செலவில்லாத உரமாக இது அமைகிறது. தொடர்ந்து நான் இதனை பின்பற்றினேன்" என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி பேசியுள்ளார்.

அவரது கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கட்கரி பேசிய வீடியோ யூ டியூப்பில் செவ்வாய்க்கிழமை வைரலாக பரவியது.

கட்கரி பேச்சு விவகாரத்தில், கூடுதலாக விமர்சனங்களுக்கு சுவாரஸ்யமூட்டும் விவரம் வேறொன்றும் உள்ளது.

குழந்தை பருவத்தில் சிறுநீரை ஊற்றி தனது பங்களாவில் செடிகளை வளர்த்ததாக கூறும் அதே பங்களாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மற்றும் சில அதிகாரிகளும் வசித்து வந்தனர் என்பது தான் அது.

ட்விட்டர்வாசிகள் ஆக்கப்பூர்வமாக நிதின் கட்கரி கூறிய யோசனையை இந்திய அளவில் விவாதித்து ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் பதிவுகளில் சில இன்றைய ட்வீட்டாம்லேட்டில்...

இரண்டாம்துக்ளக் ‏@2amtughluq - என் தோட்ட செடிகளுக்கு சிறுநீர் ஊற்றி வளர்த்தேன் #நிதின் கட்கரி #அய்யா எங்கூரு பயிர் எல்லாம் வாடி போயிருக்கு கொஞ்சம் வந்துட்டு போயிடுங்க.

Balan Shakthi ‏@balankalki - அமைச்சர் நிதின் கட்கரிக்கு ஒரு வேண்டுகோள். ஒவ்வொரு ஊருக்கும் சிறுநீர் சேமிக்க ஒரு தொழிற்சாலையை கட்டி கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தரலோக்கலு லேஜிபாய் ‏@TharaLocal - சிறுநீரை ஊற்றினால் செடிகள் செழிப்பாக வளரும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. #இவரு டெல்லி விசயகாந்த் போல .. எடக்கு மடக்காவே பேசுறாரு!

நாகராஜசோழன் ‏@kandaknd - சிறுநீரை ஊற்றினால் செடிகள் செழிப்பாக வளரும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. #ஆகவே மக்களே அவசரம் என்றால் தயங்காமல் அண்ணண் வீட்டு செடிகளில்...

Mohamed Basheer ‏@Basheer_jj - எச்சுஸ்மி....சென்ட்ரல் மினிஸ்டர் நிதின் கட்கரி ஊட்டுல தோட்டக்காரன் வேலை இருக்கு யாரும் வரீங்களா?

S.K Soundhararajan ‏@SSk0005556 - இனி உச்சா வந்த உடனே செடியில் அடிக்க நிதின் கட்கரி சொன்னாருங்க.

ராஜேஷ் சுப்பிரமணியன் ‏@tamizhanlink - சிறுநீரின் சிறப்பை அழகாய் விளக்கிய நிதின் கட்கரி கூறுவது உண்மை தானா. வேளாண் விஞ்ஞானிகள் சற்று விளக்குங்கள்.

Nasurudheen K Basha ‏@nasura8 - பிரதமர் டாய்லட்ல உச்சா போக சொல்றாரு. நம்ப நிதின் கட்கரி காடர்ன்ல போக சொல்ராரு, ஒழுங்கா சொல்லுங்க நங்க எங்கதான் போக????

மு.நிஜாம் தீன் ‏@nizamdheen10 - சிறுநீரை ஊற்றினால் செடிகள் வேகமாக வளரும் - நிதின் கட்கரி# இது தெரியாமல்தான் பருவமழை பொய்த்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்களா?

மாடர்ன் தமிழன் ‏@gowtwits - சிறுநீர் ஊற்றினால் செடி நன்றாக வளரும் - நிதின் கட்கரி, பாஜக. பஸ்ஸ்டாண்ட் டாய்லெட்ட எல்லாம் உரக்கடையா மாத்திட வேண்டிதான்...

Balan Shakthi ‏@balankalki - நிதின் கட்கரியின் யோசனை பலே. ஆனால் சிறுநீறுக்கு பஞ்சம் ஏற்படாமல் இருந்தால் சரி முடிந்தால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியும் செய்யலாம்.

மாயவரத்தான் ‏@mayavarathaan - செடிகள் வேகமாக வளர சிறுநீரை ஊற்றுங்கள் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. #மாட்டுக்கிட்டேருந்து மனுஷனுக்கு வந்தாச்சா?

ஜெயின்ஜெயபால் ‏@jainjayapal - சிறுநீர் ஊற்றினால் பயிர்கள் செழிக்கும்:- நிதின் கட்கரி. #பிறகென்ன உங்க பண்ணை வீட்டை பொது கழிப்பிடமா மாத்திறவேண்டியதுதான?!

ஆழ்வார்க்கடியான் ‏@Tamilblr - நாங்கல்லாம் பல காலமா பூமிக்கு உரம்போடுறவங்க.. இன்னைக்கு வந்துட்டு, செடிக்கு உச்சா விடச்சொல்லி பேரு வாங்கிரலாமுன்னு பார்குறாரு #NitinGadkari

SCROLL FOR NEXT