வலைஞர் பக்கம்

இணையகளம்: ஓபிஎஸ் அவர்கள் விடுதலை!

செய்திப்பிரிவு

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பையொட்டி, சமூக வலைதளங்களில் தெறிக்கப்பட்ட கருத்துகளில் சில:

கீர்த்தனா கீர்: ஓபிஎஸ் அவர்கள் விடுதலை!

யெஸ். பாலபாரதி: இன்னிக்குத்தான் உண்மையான மதர்’ஸ் டேவாம்ல...

ராசசேகரன் மன்னை: கோட்டான கோடி நன்றி ஏசப்பா... கோட்டான கோடி நன்றி!

அதிஷா: லட்டு வேண்டும் என்று நினைப்பவர்கள் போயஸ் தோட்டம் செல்லவும், வடை வேண்டும் என்று நினைப்பவர்கள் கோபாலபுரம் செல்லவும்!

மாலன் நாராயணன்:

எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதோ?

வாடி ராசாத்தி, புதுசா, விரசா, ரவுசா என்ற பாடல் வரிகள் கொண்ட திரைப்பட விளம்பரம் ஒன்று, இன்று வழக்கத்தைவிட அதிக முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாவதைப் போலத் தோன்றுகிறது. பிரமையோ!

விஜயசங்கரன் ராமச்சந்திரன்:

இது ஒரு பகிர்தல்:

இது ஆடென்று நீங்கள் சொல்கிறீர்கள்.

இந்த நகரம் முழுவதுமே இதை ஆடென்றுதான் சொல்கிறது.

எனக்கும் இது ஆடென்று தெரிகிறது.

ஆனால், இது ஆடென்பதற்கு என்ன ஆதாரம்?

விஷ்வா விஸ்வநாத்:

உலகத்திலேயே அழுதுக்கிட்டே பதவியேற்ற ஒரே முதல்வர்....

சிரிச்சிக்கிட்டே பதவியைத் துறக்கும் ஒரே முதல்வர்...

ஓ.பன்னீர் செல்வம் மட்டும்தான்!

இனி தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் குமாரசாமிக் கோவில்களும்

திமுக சார்பில் மனசாட்சி நீதிமன்றங்களும் தொடங்கப்படும்!

ஜெயசந்திரா ஹஷ்மி: அப்போ இன்னைல இருந்து பன்னீர்செல்வம் மக்கள் முதல்வரா?

கவிதா பாரதி: எல்லா சாமியையும் கும்பிட்டாங்க.. ஆனா, குமாரசாமிதான் காப்பாத்தினிச்சு!

ஆர். நறும்பூநாதன்: அந்தாளு என்னடான்னா ஆயிரம் பக்கம் விலாவாரியா ஒண்ணொண்ணா சொல்லி… கடைசில சொன்னாரு. இந்தாளு பத்து செகண்டுல பொசுக்குன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.. ஒண்ணுமே புரியல உலகத்துல... என்னமோ நடக்குது...

சூர்யா பார்ன் டு வின்: குன்ஹா சட்டம் படிச்சப்ப வேற சிலபஸ்... குமாரசாமி படிச்சப்ப வேற சிலபஸ்...

எழில் அரசன்: எப்படியாவது கஷ்டப்பட்டு படிச்சி ஜட்ஜ் வேலைக்குப் போயிடணும்.

வில்லவன் ராமதாஸ்:

என்னய்யா ரொம்பத்தான் பொங்கறீங்க? மக்களுக்கு நீதித் துறை மீது நம்பிக்கை வர்ற மாதிரி குன்ஹா தீர்ப்பு சொன்னாரு... அரசியல்வாதிகளுக்கு நீதித் துறை மீது நம்பிக்கை வர்ற மாதிரி குமாரசாமி தீர்ப்பு சொல்லியிருக்குறாரு. அதுக்கும் இதுக்கும் சரியாப்போச்சு. சட்டம் எல்லாருக்கும் சமம்ங்கறத இப்பவாச்சும் புரிஞ்சுக்கிட்டு, போய் அடுத்த வேலையைப் பாருங்க!

பிரபு வைட்ஸ்க்ரீன்: நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல!

ராசு ராசு: ர்புதீப்

அராத்து: காரணமே தெரியாம பலருக்கு கலைஞரைப் பிடிக்கும். அதேபோல, பலருக்கும் ஜெயலலிதாவைப் பிடிக்கும். என்ன பிரச்சினை? # மேற்சொன்ன இரண்டு கேஸ்களிலும் ஊழல் ஒரு மேட்டரே இல்லை. ஏய்யா, கீழ் கோர்ட்டு தண்டனையையே மேல் கோர்ட்டும் கொடுக்கணும்னா, அப்புறம் எதுக்குய்யா மேல் கோர்ட்டு?

திருமேனி சரவணன்:

காமராஜர் மறைந்தபோது அவருடைய சொத்து விவரம்:

சட்டைப் பையில் - ரூ. 100

வங்கிக் கணக்கில் - ரூ. 125

கதர் வேட்டி - 4, கதர் சட்டை - 4

கதர் துண்டு - 4, காலணி ஜோடி -2

மூக்குக் கண்ணாடி - 1

பேனா - 1

சமையல் பாத்திரம் - 1

என்னமோ ஞாபகம் வந்துச்சு...

லெனின் பாபு: ஆகவே, 18 வருடங்களாக அம்மாவை மன உளைச்சல் ஆக்கியும், பல அதிமுக தொண்டர்கள் சாவுக்குக் காரணமாகவும் இருந்த சுப்பிரமணியன் சுவாமி, அன்பழகன், நீதிபதி குன்ஹா ஆகியோருக்கு எதிராக அதிமுக சார்பில் வழக்கு தொடர வேண்டும். # செய்வீர்களா?

சா. அனுஷ்: நீதியரசர் ஜான் மைக்கேல் டி' குன்ஹா தற்போது என்ன மனநிலையில் இருப்பார் என்று அறிய ஆவல்...

விமலாதித்த மாமல்லன்: ஜெயலலிதாவின் தீர்ப்புக்காக இந்திய நீதித் துறையைக் கடுமையாகச் சாடியுள்ளார் பிரஷாந்த் பூஷண். ஆகவே மக்களே... அஇஅதிமுகவுடன் ஆப்பு கூட்டணி உறுதி!

அருண் டைர்: தமிழ்த் திரையுலகம் பாராட்டு விழா எல்லாம் எடுக்காது என நம்புவோமாக!

SCROLL FOR NEXT