வலைஞர் பக்கம்

ட்வீட்டாம்லேட்: இனிய நினைவுகளை பதியவைத்த பால்யம்

பத்மப்ரியா

பால்ய நாட்கள் பலருக்கும் பசுமையானது. ஆனால், அதனை நினைக்கக்கூட நேரமில்லாமல் போன நிலையில், அதனை மறுபடியும் பலருக்கு நினைவூட்ட வைத்திருக்கிறது ட்விட்டர் பக்கம்.

பசுமையான நினைவுகளை நினைவுபடுத்தி பகிரும் வாய்ப்பை >#பால்யம் என்ற ஹேஷ்டேக் ஏற்படுத்தி தந்துவிட்டது. திங்கள்கிழமை மாலை முதல் இந்திய அளவில் 'பால்யம்' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது.

ட்விட்டரில் தமிழிலேயே ஒரு ஹேஷ்டேக் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது இது இரண்டாவது முறை. முதல் முறையாக #தமிழ்வாழ்க என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றது. 6-வது இடத்திலிருந்து ட்ரெண்டிங்கில் இரவு நிலவரப்படி 3-வது இடத்துக்கு முந்திச் சென்றது. சென்னை ட்ரெண்டிங்கில் இந்த ஹேஷ்டேக் முதல் இடத்தை தக்க வைத்தது.

இது போதாதா நமது தமிழ் ட்வீட்டாளர்களுக்கு... தங்களது பால்ய கால கதைகளை ட்வீட்டிடத் தொடங்கிவிட்டனர். அவற்றில் பெரும்பாலானவை உணர்வுபூர்வமானவை. அந்த பால்ய நினைவுகள் இன்றைய ட்வீட்டாம்லேட்டில்...

திரு ‏@thirumarant - தெருவுல ஒரே டிவி... வாரம் ஒரு படம் போடுவாங்க.. எப்ப அவுங்க வீட்டு கதவு திறக்கும்னு ரோட்லயே காத்திருப்போம் #பால்யம்

அன்டோ பிரசாந்த் ‏@ANTOpedia - பழத்தின் விதைய திண்ணுட்டா, வாய் வழியா மரம் வளரும்னு நினைச்ச காலம் தான் #பால்யம்

கருணா ‏@karuna - #பால்யம் நண்பர்களுடன் உட்காந்து, புத்தகத்தில் இருக்கும் அசிங்கமான முகங்களை காட்டி, "இது நீ" அப்படீனு கத்துறது..

பாலா ‏@Piliral - மடில உக்காந்துக்கப்பா என் வாஞ்சையோட அழைத்த டீச்சரிடம், நீங்க வேணா எம் மடியில் உக்காந்துக்கோங்க என்றதில் தொலைந்தது என் பால்யம்!

மிருதுளா ‏@mrithulaM - பாடல் வரிகள் புரிந்து, ரசித்தபோது தொலைந்தது என் பால்யம்!

ராஜன் ராமனாதன் ‏@ZhaVinci - பிய்த்து எடுத்தாலும் பீரோவைவிட்டு வர மறுக்கும் சக்திமான் ஸ்டிக்கரில் ஒட்டியிருக்கிறது என் பால்யம்.

எவனோ ஒருவன் ‏@rajasivan2 - வீட்ல தின்றதுக்கு ஒண்ணும் இல்லாத போது சக்கரை திருடி சாப்பிடும் #பால்யம் அழகு

க தி ர் - ‏@Kathirru - எப்ப கீழ வுழுந்து அழுவாம எழுந்திருக்கறமோ அப்பவே முடிஞ்சுது பால்யம்!!

RAJU ‏@GOVINDARAJEN - மகளின் பால்யம் மாறி, தந்தையிடம் தோழமையுடன் விவாதிக்கும் பருவமாக, நாம் உணரும் முன்பே சத்தமின்றி மாறிவிடுகிறது.

ட்யூட்டி டாக்டர்® ‏@mpgiri - கழுத்துல கட்டற தாலில தான் எதோ விஷயம் இருக்கு. அதனால்தான் பாப்பா பிறக்குதுன்னு நினைச்சிட்டிருந்த இனிமையான பால்யம் என்னுடையது.

SCROLL FOR NEXT