வலைஞர் பக்கம்

ட்வீட்டாம்லேட்: மோடி பிரதான மந்திரியா.. பிரயாண மந்திரியா?

பத்மப்ரியா

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று வரும் மே மாதத்துடன் ஒரு வருடம் நிறைவடையப் போகிறது.

இந்த ஒரு வருட காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை ஆஸ்திரேலியா, பூட்டான், பிரேஸில், கனடா, ஜப்பான், மொரிஷியஸ், மியான்மர், செஷில்ஸ், சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு தலா ஒரு முறையும், நேபாளத்துக்கு இரண்டு தடவையும் அரசு முறை பயணமாக சென்றிருக்கிறார். தற்போது 7 நாள் பயணத்தில் உள்ள பிரதமர் மோடி கனடா சென்றடைந்துள்ளார்.

இதேபோல, கடந்த ஜூன் மாதத்தில் தொடர் சுற்றுப் பயணங்களில் ஈடுப்பட்ட மோடி, பூட்டான் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது பூட்டான் என்று கூறுவதற்கு பதிலாக நேபாள் என்று தவறுதலாக தெரிவித்தார். இதனை அந்நாட்டு மக்கள் பலரும் அவரது தொடர் வெளிநாட்டுப் பயணங்களை குறிப்பிட்டு விமர்சித்திருந்தனர்.

இந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி மற்றொரு சுற்றுப்பயணத்தில் இருக்கும் நிலையில், அவரது பயணம் குறித்து மீண்டும் ஒரு முறை ட்வீட்டாளார்கள் கலாய்ப்புடன் அலசுகின்றனர். அவற்றில் சில நமது இன்றைய ட்வீட்டாம்லேட்டில்....

திரு ‏@thirumarant - சச்சின் டெண்டுல்கர் மாதிரி உடைக்கவே முடியாத‌ ரெக்கார்ட் வச்சிருந்தாங்க பிரதீபா பாட்டில்... ஆனா மோடி அத இந்த வருஷமே ஒடச்சிடுவார் போல...

தூரிகை ‏@Thoorighai - அப்டி என்ன வாக்குறுதி குடுத்துருப்பாங்க சென்னை அமிர்தால? மோடி இந்தியாவிலயே இருப்பார்னு சொல்லிருப்பாங்களோ?! ஆமா, அமிர்தான்னா என்ன?

மொக்கராசு ‏@mokrasu - நீங்க மட்டும் ஆன்சைட் போகலாம். ஆனா, மோடி போனா குத்தம். என்னாங்கடா உங்க நியாயம்!!?? #Globalization #TravelImportant

ட்விட்டர்MGR ‏@RavikumarMGR - எந்த நாட்ல இருக்காருன்னே தெரியலேன்னா ராகுல்! எந்த நாட்டுக்குப் போவாருன்னே தெரியலேன்னா அது மோடி!

ஆல்தோட்டபூபதி ‏@thoatta - ஜெர்மனி மட்டுமல்ல, உலகத்தின் பார்வையே இந்தியா பக்கம் தான் உள்ளது - மோடி # அப்புறம் ஏன் உங்க பார்வை மட்டும் கேமரா பக்கம் உள்ளது :-/

இளையராஜா டெண்டிஸ்ட் ‏@ilasuraassa - பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்த விமானம் கோளாறு ! - செய்தி. அதுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் குடுங்கப்பா, ஓயாம! நாடு நாடா சுத்திக்கிட்டே இருந்தா...

Sushima Shekar ‏@amas32 - NRIகளையெல்லாம் இந்தியா திரும்பச் சொல்லிய மோடி, அவரே NRI ஆகிவிட்டார். இப்போ அவரை நாம் நாடு தரும்பச் சொல்ல வேண்டனும் போல!

பூபதி கலைவாணன் - தேர்தலுக்கு முன் மாநிலம் மாநிலமாக சுற்றினார்... தேர்தலுக்கு பின் நாடு நாடாக சுற்றுகிறார்...‪#‎மோடி‬

அன்சர் பாஷா ‏@sowfiaansar - ஜெர்மனி பயணத்தை முடித்து கனடா புறப்படுகிறார் பிரதமர் மோடி. >>> வராத கோடை மழையே இந்த வருஷம் வந்துவிட்டது.. இன்னும் மோடி ஆளே கானோமே...??

சாம்ராட் ‏@Its_SaamRaat - தோழர் #மோடி இன்றே ஆகாய மார்க்கமாக ஜெர்மனி செல்கிறார். அவரிடம் உங்கள் குறைகளை கூறுங்கள்..

Abdul kathar ‏@AkKathar - சுற்றுலா மூலம் பல நாடுகளை கண்டறிந்தவர். விதவிதமான உடை அணிந்து மக்கள் மனதை கொள்ளை அடித்தவர் #மோடி நாளைய வரலாறு இப்படியும் பேசும்....

இப்ஸ் ‏@imippz - #மோடி இவர உலகம் சுற்றும் வாலிபன் படத்துல MGR க்கு பதிலா நடிக்க வைச்சுருக்கலாம்.

Arafath ™ ‏@Araaafath - நரேந்திர மோடி ட்வீட்டரில் இருக்கிறார், பேஸ்புக்கில் இருக்கிறார், ஆனால் இந்தியாவில் மட்டும் இருப்பதில்லை #படித்ததில் பிடித்தது

ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா ‏@Ulaganandha - நரேந்திர மோடி அவர்கள் பிரதான மந்திரியா அல்லது பிரயாண மந்திரியா? :p #ModiInGermany #ModiInFrance

சின்ன கவுண்டர் ‏@chinna_gounder - உலகமே இந்தியாவை உற்றுப்பார்க்கிறது: மோடி #ஆனா நீங்க மட்டும் கேமராவ மட்டும் தான் பாக்குறீங்க ஜி..

Ezhil Prabhu ‏@zhilprabhu - ஆமா... இந்தியா எங்க இருக்கு...? அது ஈரோடு பக்கம், தூத்துக்குடி பக்கம் இருக்கு :P#மோடி :)

SCROLL FOR NEXT