வலைஞர் பக்கம்

டாம் கிளான்ஸி 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

உலகப் புகழ்பெற்ற உளவுத் துறை சார்ந்த நூல்களைப் படைத்த அமெரிக்க நாவல் ஆசிரியர் டாம் கிளான்ஸி (Tom Clancy) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் மேரி லேண்ட் மாநிலம் பால்டி மோரில் (1947) பிறந்தார். இயற்பெயர் தாமஸ் லியோ கிளான்ஸி. தந்தை தபால் அலுவலகத்தில் பணிபுரிந்தார். பிள்ளை தரமான பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற் காகவே தாயும் வேலைக்கு சென்றார்.

* பால்டிமோரில் உள்ள லயோலா கல்லூரியில் (தற்போது லயோலா பல்கலைக்கழகம்) 1965-ல் சேர்ந்தார். ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

* ராணுவத்தில் சேர விரும்பினார். பார்வைக் குறைபாடு காரணமாக அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும், ராணுவம், பனிப்போர், அரசியல் களம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதுபற்றி பல புத்தகங் களைப் படித்தார். ஓய்வு நேரங்களில் நாவல்கள் எழுதி னார். கூடவே, காப்பீட்டுத் தொழிலும் செய்துவந்தார்.

* இவரது ‘தி ஹன்ட் ஃபார் ரெட் அக்டோபர்’ என்ற நாவல் 1982-ல் வெளியானது. முதல் நாவலே விற்பனை யில் சாதனை படைத்தது. அதில் ராணுவம், பனிப்போர் பற்றிய தகவல்களை விரிவாக, சுவாரஸ்யமாக எழுதி யிருந்தார். பணமும் புகழும் இவரைத் தேடி வந்தன.

* இவரது கதை சொல்லும் பாணி தனித்துவமானது. நாவல்களில் உளவு, தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தாலும் சுவாரஸ்யம், நகைச்சுவை, கூர்மையான உரையாடல் ஆகியவையும் வெகு சிறப்பாக இருக்கும்.

* டாம் கிளான்ஸி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார். மொத்தம் 28 நாவல்கள் எழுதியுள்ளார். அவற்றில் 17 நாவல்கள் விற்பனையில் சாதனை படைத்தன. சில நாவல்கள், ராணுவ கதைக் களத்தைக் கொண்டவை. ‘நெட் ஃபோர்ஸ்’ நாவல் தொலைக்காட்சிப் படமாகத் தயாரிக்கப்பட்டது. இவரது புத்தகங்கள் ஏறக்குறைய10 கோடி பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

* இவரது ஜாக் ரேயன், ஜான் கிளார்க் ஆகிய கற்பனைக் கதாபாத்திரங்கள் உலகம் முழுவதும் பிரபலமடைந்தன. ஜாக் ரேயன் என்ற நேர்மையான சிஐஏ அதிகாரி கதாபாத்திரத்தை வைத்து இவர் 10 நாவல்களைப் படைத்துள்ளார்.

* அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானப் படை, கடற்படை குறித்தும் கட்டுரை நூல்கள் எழுதியுள்ளார். வீடியோ கேம்களுக்கு ஆலோசனை வழங்கிவந்தார். கிளான்ஸியின் பெயர் கொண்ட வீடியோ கேம்களும் விற்பனையில் சாதனை படைத்தன.

* தி ஹன்ட் ஃபார் ரெட் அக்டோபர், பாட்ரியாட் கேம்ஸ், கிளியர் அண்ட் பிரசன்ட் டேஞ்சர், தி சம் ஆஃப் ஆல் ஃபியர்ஸ் ஆகிய கதைகளைத் தழுவி தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.

* இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வாசகர்கள் உள்ளனர். 20-ம் நூற்றாண்டில் விற்பனையில் சாதனை படைத்த நூல்களை எழுதிய படைப்பாளிகளில் ஒருவராகப் போற்றப்படும் டாம் கிளான்ஸி 66 வயதில் (2013) மறைந்தார்.

SCROLL FOR NEXT