ஜெயேந்திரர்,காஞ்சி சங்கராச்சாரியார்:
சங்கர மடத்துக்கும் ஜெயகாந்தனுக்கும் தொடர்பு ஏதும் இல்லை. எழுத்தாளர் என்ற முறையில் அவர் என்னைச் சந்தித்தபோது, அவருக்கும் எனக்கும் இடையே நட்பு உருவானது. சில கருத்து ஒற்றுமைகள் இணைத்து உருவாக்கிய நட்பு இது. ஆன்மிகத்தை அவர் மனம் நாடியது. மகா பெரியவரின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளை நான் கூறியபோது, நாத்திகத்தைக் கைவிட்டு ஆன்மிகத்தின் பாதையில் எழுதலானார். ஓரிரு நாட்களுக்கு முன்புகூட அவர் உடல்நலம் தேறி வீடு திரும்பப் பிரார்த்தித்து, பிரசாதங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால், அவர் மறைந்த செய்தி பெரும் துயர் அடையச் செய்கிறது (இப்படிச் சொல்லும்போதே உடைந்த ஜெயேந்திரர் கண்ணீர் விட்டு அழுதார்).
- ஜி.கார்த்திக்