என் வாழ்க்கைக் கனவுகளில் ஒன்று ஒரு குறிப்பிட்ட ஜேகேவின் நாவலைத் திரைப்படமாக்குவது. அவர் வாழ்நாள் முடிந்துவிட்டது. அந்தக் கனவு என் வாழ்நாளில் நிறைவேறுமா என்று தெரியவில்லை.
முதலில் நான் ஜேகேவைப் பார்த்தபோது எனக்கு வயது 17. எங்கள் கல்லூரியில் பேசவந்திருந்தார். அவரை ஒரு ஸ்கெட்ச் வரைந்து அவரிடம் காட்டி கையெழுத்து வாங்கினேன். என் காகிதப் புதையல்களில் அது எங்கோ இருக்கக்கூடும்.
தமிழ் எழுத்தாளர்களுக்குப் பரவலான சமூக அடையாளத்தை அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்த முன்னோடி ஜெயகாந்தன். வாசகனின் வாசகியின் அறிவில் நம்பிக்கை வைத்து அவர்களிடம் நட்புணர்ச்சியோடு எழுதியவர். அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பேசாப் பொருளைப் பேசத் துணிந்தவர்.
2000த்திலும் பேசாப் பொருளைப் பேசும் நாடகங்கள் பரீக்ஷாவின் 'நாங்கள்". நாளை மறு நாள். அவற்றை அன்புடன் ஜெயகாந்தன் நினைவுக்கு அர்ப்பணிக்கிறோம்.
- ஞாநி சங்கரன்,எழுத்தாளர்