வலைஞர் பக்கம்

உமாசங்கருக்கு ஆதரவும் எதிர்ப்பும்: ட்விட்டரில் அனல் பறக்கும் விவாதம்

நேஷனலிதா

மதப் பிரச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கைக்கு காரணம், கிறிஸ்தவ மத ஜெபக் கூட்டங்களில் கலந்து கொண்டதால் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர்.

ஓர் அரசு அதிகாரி எப்படி மதப் பிரச்சாரங்களில் ஈடுபடலாம் என்ற கேள்விக்கு ஐ.ஏ.எஸ்.அதிகாரி மதப் பிரசங்கம் செய்யக் கூடாது என்று எந்த சட்டத்திலும் சொல் லப்படவில்லை என்று உமா சங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இப்பிரச்சினை சமூக வலைத்தளங்களில், குறிப்பாக ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. #IASEvangelist, #Umashankar என்ற இரண்டு ஹேஷ்டேகுகளில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வெளியாகி வருகின்றன.

இதோ உங்கள் பார்வைக்காக சில பதிவுகள்:

#Umashankar-ல் பதிவிடப்பட்ட கருத்துகள்:

@JasumatiPatel : ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் உடனடியாக மனநல மருத்துவரை சந்திப்பது நல்லது. ஏசு கிறிஸ்து பேசுவது என் காதில் கேட்கிறது என அவர் கூறுவதில் இருந்தே தெரியவில்லையா? எனக்குத் தெரிந்து ஏசு கிறிஸ்து போப் ஆண்டவரிடம்கூட பேசியதில்லை.

@premrao: உமா சங்கர், நீங்கள் தலித் ஆக் இருக்க விரும்புகிறீர்களா? இல்லை கிறிஸ்துவராக இருக்க விரும்புகிறீர்களா? என்பதை முதலில் நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில், இந்தியாவில் மட்டுமே கிறிஸ்துவ மதம் சாதியத்தால் பிரித்துப்பார்க்கப்படுகிறது.

‏@Ahmedshabbir20: இதே உமா சங்கர் ஐ.ஏ.எஸ்.தான் திருவாரூர் ஆட்சியராக இருந்தபோது, கோயில் குளத்தை சுத்தப்படுத்தினார் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

@shivsBHARAT: உமா சங்கர் நம் கண் முன் தெரிந்த ஒரு உதாரணம். இவரைப்போல் நூற்றுக்கணக்கானோர் அரசு அலுவலகங்களில் உள்ளனர். அவர்கள் கிறிஸ்துவ மதத்தை பரப்பி வருகின்றனர்.

#IASEvangelist-ல் பதியப்பட்ட சில கருத்துகள் சில:

@DineshGhodke: நமது அரசியல் சாசனத்தில் மதச்சார்பின்மை, சோஷலிசம் போன்ற வார்த்தைகள் திணிக்கப்பட்டிருக்கும் வரை உமா சங்கர் போன்றவர்களை பொருத்துக் கொள்ளதான் வேண்டும்.

@AmiSri : இவருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிக்கு என்ன வித்தியாசம். இருவருமே தங்கள் மதத்தை பரப்புகின்றனர்.

@ambkcsingh: உமா சங்கர் வாதங்கள், நடவடிக்கைகள் அர்த்தமற்றவை. அவர் தனது வேலையை விட்டுவிட்டு போதகராகலாம்.

@rangats: அவருக்கு மனநலம் சரியில்லை என நன்றாகவே தெரிகிறது.

@sadhavi: நான் கிறிஸ்துவன். என் மதம் மற்ற மதங்களைவிட மேலானது என உமா சங்கர் கூறியதுபோல், ஒரு தேசிய தொலைக்காட்சியில் இந்து ஒருவர் கூறியிருந்தால் பாஜகவை இவ்விவகாரத்தில் இழுத்திருப்பார்கள்.

@Ahmedshabbir20: பணி முடிந்த பிறகும், விடுமுறையிலும் உமா சங்கர் பிரச்சாரம் செய்வதில் தவறு என்ன இருக்கிறது.

SCROLL FOR NEXT