சிறந்த சினிமா ரசிகர் விருது:
தேர்தல் பிரச்சார பிஸிக்கு நடுவிலும் ரஜினிகாந்த், விஜய் என்று அடுத்தடுத்து தனக்கு பிடித்த சினிமா நடிகர்களைச் சந்தித்து அவர்களுடன் டீ குடித்த நரேந்திர மோடிக்கு இந்த வாரத்தின் சிறந்த சினிமா ரசிகர் விருது. இந்த விருதுடன் சிறப்பு பரிசாக தமிழக உடையான வேட்டி சட்டை ஒரு டஜன் வழங்கப்படுகிறது.
சிறந்த யோகா கலைஞர்கள் விருது:
முதலமைச்சர் பிரச்சாரத்துக்கு வரும் ஹெலிகாப்டரைக் கண்டதும் மேல்நோக்கி வளைந்து, பின்னர் அவர் தரையிறங்கியதும் தரயில் தலை படும்படி உடலை வளைத்து விழுந்து வணங்கும் தமிழக அமைச்சர் கள் அனைவருக்கும் இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த விருது டன் சிறப்பு பரிசாக ‘அமைச்சர் பதவியில் தொடர்வது எப்படி’ என்ற புத்தகம் பரிசாக வழங்கப்படுகிறது.
சிறந்த கங்காரு விருது:
சிவகங்கை யில் மட்டும்தான் தேர்தல் நடக்கி றது என்பதைப் போல தன் மகன் கார்த்தியை சுமந்து கூட்டமே வராவிட் டாலும் சிவகங்கையைச் சுற்றிச் சுற்றி ப.சிதம்பரத்துக்கு இந்த வாரத்தின் சிறந்த கங்காரு விருது. சிறப்பு பரிசாக கைச் சின்னம் பொறித்த சில கைக்கடிகாரங்களும் வழங்கப் படுகிறது.