குவாண்டம் கோட்பாடு, தத்துவம், உளவியல் குறித்த புதுமையான கருத்துகளை வழங்கிய அமெரிக்க இயற்பியல் அறிஞரான டேவிட் ஜோசப் பூம் பிறந்த நாள் இன்று (டிசம்பர் 20). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
பென்சில்வேனியாவின் வில்கஸ் பாரி என்ற இடத்தில் யூத குடும்பத்தில் பிறந்தவர். அப்பா ஒரு மரப் பொருட்கள் டீலர். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். இயற்பியலில் மட்டுமல்லாமல், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.
ஆரம்பகாலத்தில் கம்யூனிஸ் டாக மாறினார், கம்யூனிஸ்டு கள் ஆதரவுடன் இயங்கும் யங் கம்யூனிஸ்ட் அமைப்பு களில் சேர்ந்து அமைதி நடவடிக்கைகளுக்கான கமிட்டி, ராணு வத்துக்காக கட்டாயமாக ஆள்சேர்ப்பதை எதிர்க்கும் அமைப்பு ஆகியவற்றில் தீவிரமாக பணிபுரிந்தார்.
முதலில் பிரேசிலில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இறுதியாக லண்டன் பிர்க்பெக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். உலோகங்களில் எலக்ட்ரான்கள் தொடர்புகொள்வதால் ஏற்படும் இயக்கங்கள் பிளாஸ்மா அஸிலியேஷன் என்பதைக் கண்டறிந்தார்.
தனது புதிய கோட்பாடுகள் பற்றிய தனது புதுமையான ஆய்வுகள் பற்றி விரிவாக எழுதிய `காஷுவாலிட்டி அன்ட் சான்ஸ் இன் மாடர்ன் ஃபிசிக்ஸ்’ என்ற புத்தகத்தை 1957-ஆம் ஆண்டிலும் `ஹோல்னஸ் அன்ட் தி இம்ப்ளிகேட் ஆர்டர் ’என்ற நூலை 1980-ஆம் ஆண்டிலும் வெளியிட்டார்.
1960களில் இந்திய தத்துவ மேதை ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை சந்தித்தார். தொடர் சந்திப்புகளில் நிகழ்ந்த உரையாடல்கள் தொகுக்கப்பட்டு ‘தி என்டிங் ஆஃப் டைம்’ புத்தகமாக வெளிவந்தது. இயற்பியலாளர் மட்டுமல்லாமல் தத்துவமேதையுமாவார்.
இவரது கருத்துகள் அனைவராலும் வரவேற்கப்பட்டன. இவரது உலகமே தனியானது. இவரது பிரபஞ்சத்தில் கண்ணுக்குப் புலப்படாத முழுமையிலிருந்து தொடர்ந்து வெளிப்படும், வெளிப்படாத மறைபொருள்கள், அவற்றின் இயக்கம் மட்டுமே அடிப்படையானவை. மற்றதெல்லாம் இரண்டாம்பட்சம்தான்.
இயற்கை முழுமைத்தன்மையோடு இருப்பதை இளம் வயதிலேயே நான் உணர்ந்தேன் என்றும் மரங்கள், மலைகள், நட்சத்திரங்களுடன் நான் உள்முகமாகத் தொடர்பு கொண்டிருப்பதை உணர்ந்தேன் என்றும் கூறியுள்ளார்.
குவாண்டம் கோட்பாடு பற்றி முதன் முதலாக ஆராய்ந்த சமயத்தில் நான் கண்டறிந்த அந்த விஷயத்தை சிந்தித்து வெளியிட்டேன் என்பதைவிட அதை நேரடியாக அனுபவித்த உணர்வு எனக்கு ஏற்பட்டு அதனுடன் ஒரு அகத் தொடர்பை உணர்ந்தேன் என்று கூறுகிறார். மரணம் என்பது காலம் மற்றும் அடையாளத்துடன் மட்டுமே தொடர்புபடுத்திப் பார்க்கப்பட வேண்டியது என்றும் கூறியுள்ளார்.
குவாண்டம் கோட்பாடு, தத்துவம், பிரபஞ்சம், இயற்கை ஆகியவை குறித்து புதுமையான சிந்தனைகளை வெளிப்படுத்தினார். 20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான தத்துவார்த்த இயற்பியல் அறிஞராக புகழ் பெற்ற இவர் 77-ஆம் வயதில் காலமானார்.