''ஆண் மயில் பிரம்மச்சர்யத்தை பின்பற்றும் பறவை. அது ஒருபோதும் தன் இணையுடன் உறவு கொள்வதில்லை. ஆண் மயிலின் கண்ணீரைப் பருகியே பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது'' என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா செய்தியாளர்களிடம் கூறிய கருத்து இணைய வெளியில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
Sureshkumar Selvaraj
மொதல்ல ஒரு மயிலிறகை பாடப்புத்தகம், இல்லை நோட்டுப்புத்தகத்துக்குள்ள யாரு கண்ணுலயும் படாம மறைச்சி வைச்சி ஒரு வாரம் கழிச்சுப் பார்த்தா மயில் குட்டி போட்டிருக்கும்! அதுவும் பாவம் பண்ணாதவனுக்கு மட்டும்தான் குட்டி போடுமாம்..!
Ravi Krishna
இப்படித்தான் சின்ராசு கூட சின்ன வயசுல முத்தம் கொடுத்தாலே பேபி பொறக்கும்னு நினைச்சுட்டு இருந்தான்... அதுக்குன்னு ரிட்டையர்ட் ஆகற வரைக்கும் அப்டியேவா ஜட்ஜய்யா??
Mannar Mannan
மயில் ஒரு பிரம்மச்சாரி...
சப்பாணி இன்னுமா ரிலீஸ் ஆகல?
Elambarithi Kalyanakumar
அறிவியல்படி மற்ற பறவைகளைப்போலவே மயில்களும் உடலுறவின் மூலமே இனப்பெருக்கம் செய்கிறது. இந்த இணைசேருதல்கள் தனித்த இரவுகளில் யாரும் காணா வண்ணம் இருக்கின்றன.
Suresh Seenu
என் கண்ணில் நீர் வழிந்தால்
:
:
:
கொஞ்சம் எச்சரிக்கையாக எட்டியே இருங்கள்!
இவண்,
மயிலாடுதுறை மயில்சாமி!
Boopathy Murugesh
ஆண் மயிலின் கண்ணீர்த் துளிகளை பருகி தான் பெண் மயில் கர்ப்பமாகிறது - ராஜஸ்தான் நீதிபதி.
ச்
Siva Kumar S
மயில் இறகு குட்டி போடும்போது, மயில் கண்ணீர் குட்டி போடாதா போங்க தம்பி சும்மா குசும்பு பண்ணிக்கிட்டு...
திருப்பூர் தீக்குச்சி
நீதிபதி கர்ணனை பற்றி பேசவில்லை., கேரள நீதிபதியின் கேள்வியைப் பற்றிப் பேசவில்லை. ராஜஸ்தான் மயில் நீதிபதியைப் பிடித்துகொண்டார்கள் கண்ணியவான்கள்.
Nambikai Raj
நான் அலகாபாத்ல இருக்கும்போது அங்க ரயில்வே ஸ்டேஷன், ரோடு, வீடு, கடை என எங்க பார்த்தாலும் சிவப்பு சிவப்பா இருப்பதை பார்த்திருக்கேன். எதோ பான்னு சொல்லுவாங்க அந்த பாக்கை போட்டு எல்லா இடத்திலேயும் துப்பி வச்சிருப்பானுக. அது ஏன்னு அப்போ புரியலை ஆனா ராஜஸ்தான் நீதிபதி சொன்ன பிறகுதான் புரியுது.
இப்படில்லாம் கண்ணுமண்ணு தெரியாம எச்சி துப்பி வச்சதாலதான் உத்திரப்பிரதேசம் மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கு.
கோமகன்
மாட்டுல இருந்த நம்மள இப்ப மயிலுக்கு டைவர்ட் பண்ணிருக்காய்ங்க!!!
உஷாரு!!!
சாரு நாச்சியார்
செல்லூர் அமைச்சர கலாய்ச்வங்கலாம் வாங்க இப்ப.
ஆண் மயில் உறவு கொள்வதில்லை... அதனால்தான் மயில் தேசிய பறவை - ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி.
#சிரிப்பு வரல... அழுகைதான் வருது... என் முன்னோர்கள் ரத்தம் சிந்தி வாங்கிய சுதந்திர நாட்டில் இப்படி ஒரு நீதிபதி!
Kutty Giri
மயில் காட்டுல நல்லாதான் இருக்கு!
உண்மையில கிளிங்க நாங்கதான் பிரம்மச்சாரி!
கிளிஜோசியம்னு ஒண்டியா அடைச்சி வைச்சிடுறாங்க.
நாச்சியாள் சுகந்தி
மயில் நீதிபதியை குற்றம் சொல்லாதீர்கள்.
சூரியன பார்த்தே கர்ப்பம் ஆனாங்க, மஞ்சளையும் அழுக்கையும் திரட்டி புள்ளையார் பொறாந்தாருன்னு சொன்ன ஊருல கண்ணீரக் குடிச்சு மயில் கர்ப்பம் ஆகாதா? புராணங்கள் இப்படித்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது... அந்த யேசுபிரான் பிறப்பு உள்பட.
ஆணும் பெண்ணும் சேர்ந்து புள்ள பொறந்துச்சுன்னு முதல்ல இருந்த எல்லா கதையையும், புராணத்தையும் மாத்துங்க யுவர் ஆனர்.
Rohini Rj
மயில் ஒரு பிரம்மச்சாரி, குயில் ஒரு சோமாரி, காக்கா ஒரு கேப்மாரி! தனுஷ் பாடுனது டங்கா மாரி! இவனுகள வச்சுட்டு நமக்கு ஏது மும்மாரி!
Yuva Krishna
“மயில் மட்டுமல்ல. தெர்மாக்கோலும் குட்டி போடும்” செல்லூர் ராஜூ ஆவேசம்!
சிற்பன் @SKtwtz
மயில் ஒரு பிரம்மச்சாரி; எனவே அது தேசிய பறவை- ராஜஸ்தான் நீதிபதி.
எந்த மயில் வந்து உங்க கோர்ட்ல சாட்சி சொல்லுச்சு ஜட்ஜ் ஐயா..
கா. விஜய் ஆனந்த்
மயில் விசயத்துல அவர் பேசினத விடுங்க... அவர் எத்தனை கேசுல தீர்ப்பு எழுதி இருப்பாரு... தண்டனை வாங்கினவங்க நிலைமையை யோசிச்சா...???? கிறுகிறுன்னு வருதே....!
Newton @twittornewton
புராணத்திலிருந்தும் கவிதைகளிலிருந்தும் ஏன் விஞ்ஞானம் கற்கக் கூடாது என்பதற்கு இன்னொரு உதாரணம் பிரம்மச்சாரி மயில்.