மக்கள் தெய்வங்கள்
பேராசிரியர் கோ.பழனி
புலம் பதிப்பகம் (98406 03499)
விலை: ரூ.140
வெவ்வேறு சாதியைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் காதலித்தால், அதை எதிர்ப்பது, அவர்களைக் கொலை செய்வது என்று வெறித்தனம் காட்டியச் சமூகத்தில், அப்படிக் கொல்லப்பட்டவர்களைத் தெய்வங்களாக்கி வழிபடும் விநோதமும் நடந்திருக்கிறது. இந்தப் போக்குகளைப் பற்றிப் பேசுகிறது இந்நூல்.
******
மனித உடலின் கதை
(பரிணாமம், ஆரோக்கியம், நோய்)
டேனியல் இ. லிபர்மேன்
தமிழில்: ப்ரவாஹன்
பாரதி புத்தகாலயம் (044 - 24332424)
விலை: ரூ. 470
ஆரோக்கியம், நோய் என்ற வாழ்க்கையின் இன்றியமையாத மிகவும் முக்கியமான இரண்டு அங்கங்களின் பரிணாமம் ஒரு உடலின் கதையாக இந்நூலில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மானுடவியல், உயிரியல், மரபு வழிப் பண்பியல் என்று பல்வேறு தளங்களின் வழியே மனித உடல் தொடர்பான விஷயங்கள் அலசப்பட்டிருக்கின்றன.
*******
அழகிய மரம் - 18-ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி
தரம்பால் (தமிழில் பி.ஆர். மகாதேவன்)
தமிழினி வெளியீடு(9344290920)
விலை: ரூ. 450
18-ம் நூற்றாண்டில் இந்தியாவில் கல்வி எப்படி இருந்தது என்பதை காந்தியவாதியான தரம்பால் பிரிட்டிஷ் ஆவணங்களின் அடிப்படையில் தொகுத்து எழுதியிருக்கும் நூல். சாதிப் பாகுபாடுகள் கல்வி கற்கத் தடையாக இருக்கவில்லை எனவும் தரம்பால் நிறுவுகிறார். ஐரோப்பாவுடனான ஒப்பீடும் இந்த நூலில் உள்ளது.