வலைஞர் பக்கம்

ஆறு மொழிகளில் திருக்குறள்!

செய்திப்பிரிவு

அரங்கு எண்:28.

ஆங்கிலம், பஞ்சாபி, கன்னடம், மணிப்புரி, தெலுங்கு, குஜராத்தி என ஆறு மொழிகளில் வெளிவந்துள்ள திருக்குறளின் மொழிபெயர்ப்பு நூல்கள், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன அரங்கில் கிடைக்கின்றன.

தொன்மையான தமிழ் பிராமி கல்வெட்டுகளைப் பற்றி புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் எழுதிய மிக முக்கியமான ஆய்வு நூலும் இங்கு உள்ளது.

சிந்துவெளிப் பண்பாடு, சங்க இலக்கியம் பற்றியும் பல நூல்கள் உள்ளன. நற்றிணை, நான்மணிக்கடிகை, திரிகடுகம் போன்ற பழந்தமிழ் இலக்கிய நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் உண்டு!

SCROLL FOR NEXT