ஸ்டார் ப்ளஸ் நிகழ்ச்சிகள் எவ்வளவு க்யூட்டோ அதைவிட க்யூட் அதில் வரும் விளம்பரங்கள்.
2015ல் வெளியிட்ட ஸ்டார் பரிவார் அவார்டுக்காக தயாரிக்கப்பட்ட, அந்த 31 விநாடி குழந்தை இசையைக்கேட்டு அழுகையை நிறுத்தும் விளம்பரத்தைக் காண, இன்றுவரை இணையதளத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேயிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அண்மையில் அவர்கள் வெளியிட்டுள்ள சேனல் புரமோஷன் விளம்பரப் படம் ஒன்று நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 50 விநாடிகளில சொல்லப்பட்ட ஒரு நிமிடக் கதையைப் போன்றது. இந்த விளம்பரத்தில் குர்தீப் சிங் எனும் ஒரு இனிப்புப் பலகாரக் கடைக்காரராக வருகிறார் ஆமீர். விளம்பரத்திற்காகத்தான் ஆமீர் கானைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அதில் சொல்லப்பட்ட செய்தி முக்கியமானது.
பலகாரக் கடையின் வாடிக்கையாளர் ஒருவர் அவரிடம் உங்கள் வெற்றிக்கு காரணம் நீங்கள் பெற்றுள்ள சாமர்த்தியமான மகன்கள் என்று கூற ஆமீர் மறுத்து மகன்கள் அல்ல, மகள்கள் என்பார். கடைக்கு வெளியே குர்தீப் மற்றும் மகள்கள் என கடையின் பெயர் இருக்கும்..
சேனல் புரமோஷன்தான் நோக்கம் என்றாலும் நெல்லுக்குப் பாய்கிற நீர் கொஞ்சம் புல்லுக்கும் பாயட்டும் என்பதுபோன்ற முயற்சி இது.
'ஆண் என்றோ பெண் என்றோ பார்த்துக்கொண்டு வெற்றி வருவதில்லை!' என்ற செய்தியே விளம்பரத்தை நிமிர்த்துகிறது... சூரஜ் தேரா சந்தா தல்டா, கார்திஷ் மிய்ன் கர்த்தே ஹெய்ன் தாரே தங்கல் தங்கல் தங்கல் தங்கல்.... யெஸ் தங்கல் படத்தோட பாட்டு மாதிரி ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி விளம்பரத்தை நீங்களும் பார்க்கலாமே!
</p>