வலைஞர் பக்கம்

இன்று அன்று | 1932 அக்டோபர் 8: தொடங்கப்பட்டது இந்திய விமானப் படை

சரித்திரன்

இந்திய விமானப் படை 1932-ல் இதே நாளில் நிறுவப்பட்டது. அதாவது, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த போதே உருவாக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளில் முக்கியமானது இந்திய விமானப் படை. இப்படையின் முதல் விமானம் 1933 ஏப்ரல் 1 முதல் இயங்கத் தொடங்கியது. இரண்டாம் உலகப் போரின்போது நேசநாடு களின் அணியில் இந்திய விமானப் படை செயலாற்றியது.

இந்திய வான் எல்லையைப் பாதுகாப்பதும் போர்க்காலங்களில் எதிரி நாட்டு விமானப் படையின் தாக்குதல்களை முறியடிப்பதும்தான் இந்திய விமானப் படையின் முதன் மையான குறிக்கோள். உலக அளவில் 4-வது பெரிய விமானப் படையாக இது உள்ளது.

இந்திய விடுதலைக்குப் பின்னர், பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நடந்த போர்களில் இந்திய விமானப் படை விமானங்கள் முக்கியப் பங்காற்றின. போர்த்துக்கீசியர்கள் ஆதிக்கத்தில் இருந்த கோவாவை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கையான ஆபரேஷன் விஜய், ஆபரேஷன் மேக்தூத், ஆபரேஷன் பூமாலை உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளை இந்திய விமானப் படை எடுத்தது.

ஐ.நா. சபையின் அமைதி நடவடிக்கை களிலும் பங்கு வகிக்கிறது. சோமாலியா, சியரா லியோன், சூடான், காங்கோ போன்ற நாடுகளில் நடந்த உள்நாட்டுப் போர்களின்போது ஐ.நா. சபையின் சார்பில் இந்திய விமானப் படை விமானங்கள் பங்கேற்று முக்கியப்பணியாற்றின.

SCROLL FOR NEXT