இந்தப் புத்தகக் காட்சியின் சுவாரஸ்யங்களில் ஒன்று ‘தந்திரக் கலை’ எனும் பெயரில் அசத்தும் அருங்காட்சியகம்.
விஜிபி கோல்டன் பீச், எக்ஸ்பிரஸ் அவின்யூ என்று மக்களை ஆச்சரியப்படுத்தியதுதான். புத்தகக் காட்சிக்காக பாரதி, அன்னை தெரஸா, அப்துல் கலாம் என்று பல ஆளுமைகளின் உருவங்களைப் பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டிருக்கிறது.
பார்வையாளரின் பங்களிப்புடன்தான் இந்தக் கலை முழுமை பெறுகிறது என்பது தனிச்சிறப்பு. சே குவேராவுடன் கைகுலுக்கலாம்; பாரதியுடன் செல்ஃபி எடுக்கலாம். வித்தியாசமான உணர்வைத் தரும் அரங்கு இது!