சவால்கள் நிறைந்த உலகத்தில், உடல் சவால் உள்ளவர்களின் நிலையைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ஆனால், அவர்களில் ஒருவரான பாலாஜி தன் திறனை மாற்று வழியில் பயன்படுத்தி வருகிறார்.
தன்னுடைய இரு சக்கர வாகனத்தையே டாக்ஸியாக மாற்றி, தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார் பாலாஜி. தன்னுடைய பயணம் குறித்துப் பேசுபவர், தன்னுடைய டாக்ஸிக்கு 'மா உலா' (மாற்றுத் திறனாளி உலா) என்று பெயரிட்டிருப்பதாகச் சொல்கிறார்.
இனி பாலாஜியின் பயணம் காணொலி வழியாக அவரின் வார்த்தைகளிலேயே..
</p><p xmlns="">பாலாஜியின் வாழ்க்கைப் பயணத்தை உயிரோட்டத்துடன் அவர் வழியாகவே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பிரேம். மாவீரன் சோமசுந்தரத்தின் ஒளிப்பதிவில் சென்னை மாநகர சாலைகள் அழகியலுடன் வெளிச்சம் பூக்கின்றன.</p><p xmlns="">பாலாஜியின் கால் டாக்ஸியில் செல்ல விரும்புவர்கள், 8939391259 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.</p>