திரைப்பட இயக்குநர் - எஸ்.பி.முத்துராமன்.
பரபரப்பான திரையுலகப் பணிகளுக்கிடையே புத்தக வாசிப்புக்கு நேரம் ஒதுக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.
இன்றும் என் வாசிப்பு தொடர்கிறது. நம் தேசத் தலைவர்கள் பலரும் நல்ல வாசகர்கள் என்பதை நாம் அனைவரும் நினைவில் வைத்திருக்க வேண்டும். பள்ளிப் பருவத்திலிருந்தே நம் குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அவர்களின் எதிர்காலத்தைச் செழுமையாக்கப்போவது புத்தக வாசிப்புதான். இந்த முறை,
‘தொடுவில் தொடும் தூரம்’, ‘மனிதமும் தெய்வமும்’, ‘இலக்கியம் வளர்த்த தமிழ்வேள் சாரங்கபாணி’ ஆகிய புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். இன்னும் சில புத்தகங்களை வாங்கத் திட்டமிட்டிருக்கிறேன்!