வலைஞர் பக்கம்

நெட்டிசன் நோட்ஸ்: காவிரி பிரச்சினை- விவசாயி வாழ்க்கை!

க.சே.ரமணி பிரபா தேவி

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. இன்று உச்ச நீதிமன்றம் வரும் 20-ம் தேதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என புது உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் கர்நாடகாவில் மீண்டும் வன்முறையால் பதற்றம் நிலவி வருகிறது.

இது குறித்த நெட்டிசன்களின் கருத்தும், பகிர்வும் இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..

வன்முறைச் சம்பவங்களின் ஃபோட்டோக்களையும் வீடியோக்களையும் தொடர்ந்து பரப்ப வேண்டாம் நண்பர்களே. இதனால் வன்முறை உணர்வு அதிகரித்து அதனால் பல அசம்பாவிதங்கள் நடக்க நாம் நேரடி/ மறைமுகக் காரணமாக ஆகிறோம் என்பதை நினைவில் கொள்வோம்.

அரசியல் லாபத்துக்காக மக்களைத் தூண்டிவிடும் கும்பல்களின் வேலைதான் இதுவே தவிர நம்போன்ற, பிறர் மேல் துவேஷம் இல்லாத மனிதர்களின் வேலையாக இது இருக்கக் கூடாது. எங்கே வன்முறை நடந்தாலும் அது தவறுதான். ஆனால் அதற்காக அதைத் தொடர்ந்து பகிர்ந்து இன உணர்வைப் பறைசாற்ற இது நேரம் இல்லை. அனைவரும் பொறுமையாக இருந்து, இது இந்தியா என்பதை அனைவருக்கும் உணர்த்தவேண்டிய நேரம் இது.

#காவேரி

அரசியல்வாதிக்கு அரசியல் களம்,

வட இந்தியாவுக்கு தேவையற்றது,

இணைய தமிழனுக்கு ஒரு டாப்பிக்,

ஆனால் விவசாயிக்கு வாழ்க்கை!

39 எம்.பி.க்கள், 232 எம்.எல்.ஏ.வைப் பார்த்து கேள்வி கேக்காம சினிமாக்காரங்க ஏன் போராடலைன்னு கேக்குறோம்.

.

.

வீதியில் இறங்காது விடியல் இல்லை... #காவிரி

குடுக்கக்கூடாதுனு இருக்குற அவங்ககிட்ட இருக்க ஒற்றுமைகூட, கேட்கற நம்மகிட்ட இல்லனு நினைக்கும் போதுதான் துக்கம் தொண்டைய அடைக்குது. #காவிரி

உரிமை வேணும்னு கேட்டு போராட வேண்டிய நாம் முகநூலில் மட்டும் போராடுகிறோம்..

உரிமையைக் கொடுக்க முடியாது என்று கூவுற கூட்டம் வீதியில் இறங்கி போராடுகிறது..

ஏழைக்கு போராட தைரியம் இல்லை

நடுத்தர வரக்கத்திற்கு போராட நேரம் இல்லை

பணக்காரனுக்கோ அது அவசியமே இல்லை

#காவிரி பிரச்சினை

தனிப்பட்ட மனிதர்கள் எல்லாரும் ஒற்றுமையாக இருக்கும் பொழுது சில குழுக்கள் மிக மோசமாக வெறுப்பைத் தொடர்ந்து மக்கள் மனதில் ஊட்டி வருகின்றன. தண்ணீர்ப் பிரச்சினையை கவுரவப் பிரச்சினை ஆக்கியதில் அரசியல்வாதிகளின் முக்கியப்பங்கு இருக்கிறது. மக்களின் உணர்ச்சிகளை இந்த இணைய காலத்திலும் எளிதாக தூண்ட முடிவதிலேதான் அவர்களின் வெற்றி அடங்கி இருக்கிறது.

இங்கு அறிவு வேலை செய்வதை விட உணர்வுகள் மோதிக் கொள்கின்றன. மனிதமும, அன்பும் இருக்கவேண்டிய இடத்தில நான் சரி, நீ சரி என்ற நிரூபித்தல்கள் புறப்படுகின்றன. யாரையும் குறையாக நினைக்காத வாழ்வு வரம். அதில் விட்டுக்கொடுத்தல்களும், புரிதல்களும் சாத்தியம். பகிர்தல் எளிமையாகும். அது வரை போர்கள் நீருக்கு இல்லை, ஈகோ எனும் கர்வங்களுக்கு இடையே..

SCROLL FOR NEXT