வலைஞர் பக்கம்

இன்று அன்று | 1792 அக்டோபர் 13 : வெள்ளை மாளிகைக்கு அடிக்கல்

சரித்திரன்

‘வெள்ளை மாளிகை என்ன சொல்கிறது?’ என்றுதான் உலகின் பல நாடுகள் எதிர்பார்த்திருக்கும். ‘…இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது…’ என்று தொடங்கும் அறிக்கைகள் மிக முக்கிய மானவை. அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வமான இல்லமாகவும் அலு வலகமாகவும் திகழ்கிறது வெள்ளை மாளிகை.

1792-ல் இதே நாளில்தான், வாஷிங்டன் நகரில் 1,600, பென் சில்வேனியா அவென்யூ என்.டபிள்யூ. என்ற இடத்தில் வெள்ளை மாளிகைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த இடத்தைத் தேர்வுசெய்தவர், அமெரிக்காவின் அதிகாரபூர்வ முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன். அயர்லாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பாளரான ஜேம்ஸ் கோபன்தான் இதை வடிவமைத்தார். அயர்லாந்தின் டுப்ளின் நகரில் உள்ள லெயின்ஸ்டர் ஹவுஸ் மற்றும் ஜேம்ஸ் கிப்ஸ் எழுதிய கட்டிடக் கலை தொடர்பான புத்தகத்தில் வரையப் பட்டிருந்த கட்டுமான மாதிரியை அடிப் படையாகக் கொண்டு வெள்ளை மாளிகை வடிவமைக்கப்பட்டது.

8 ஆண்டுகள் நடந்த கட்டுமான வேலைகளின் முடிவில், அப்போது அதிபராக இருந்த ஜான் ஆடம்ஸ் வெள்ளை மாளிகையில் குடியேறினார். எனினும் அப்போது கட்டுமானப் பணிகள் முற்றிலும் நிறைவடைந்திருக்கவில்லை. அவருக்குப் பின் அதிபரான தாமஸ் ஜெஃபர்ஸன் வெள்ளை மாளிகையை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் இறங்கினார்.

தொடக்கத்தில் ‘அதிபரின் அரண் மனை’ என்றும் ‘அதிபரின் மேன்ஷன்’ என்றும்தான் இது அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டது. 1901-ல் அதிபர் டெட்டி ரூஸ்வெல்ட் இதை வெள்ளை மாளிகை என்று அழைக்கத் தொடங் கினார். அமெரிக்காவின் 33-வது அதிபரான ஹாரி ட்ரூமேன் இதை, “கவர்ச்சிகரமான சிறை” என்று அழைத்தாராம். ஒபாமாவைக் கேட்டால் உண்மை தெரியும்!

SCROLL FOR NEXT