பல்லாரியைச் சேர்ந்த 18 வயது மாணவர் முஸ்தஃபா. பிறப்பிலேயே தனது கைகளை இழந்தவர். அது நடைமுறை வாழ்க்கையில் மிகந்த சிரமத்தைக் கொடுத்தது. ஆனால் கடின முயற்சிக்குப் பின்னர் தனது கால் விரல்களையே மூலதனமாக்கினார் முஸ்தஃபா.
மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து சலுகைகளையும், வசதிகளையும் மறுத்தார் முஸ்தஃபா. தன் கால் விரல்களாலேயே தேர்வு எழுதியவர், பத்தாம் வகுப்பில் 75 % மதிப்பெண் பெற்றார். மொழித்தாள்களைத் தவிர மற்ற அனைத்துத் தேர்வுகளையும் எழுதுபவரின் உதவி இல்லாமல் கால் விரல்களாலேயே எழுதியிருக்கிறார்.
நன்றாகப் படித்தவர், கால் விரல்களின் உதவியால் ப்ரி யூனிவர்சிட்டி தேர்வில் (கர்நாடகாவில் +2 விற்கு சமமான தேர்வு) 80% மதிப்பெண் பெற்றிருக்கிறார்.
</p><p xmlns="">''என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர், நண்பர்கள் இல்லாவிட்டால் சாத்தியமாகி இருக்காது. அவர்கள் யாரும் இல்லாவிட்டால் வீட்டில் வெறுமனே உட்கார்ந்திருப்பேன்'' என்று கூறுகிறார் முஸ்தஃபா.</p><p xmlns="">நன்றாகப் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்னும் முஸ்தஃபாவின் குரலில் தன்னம்பிக்கை உரத்து ஒலிக்கிறது.</p>