வலைஞர் பக்கம்

பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள்

செய்திப்பிரிவு

இந்திய வாரிசுரிமைச் சட்டம்:

மனைவியையும், பெண் குழந்தைகளையும் வாரிசுகளாக்கிய சட்டம். அதுவரை மனைவியும் பெண் குழந்தைகளும் சட்டப்படி வாரிசுரிமை கோர இயலாத நிலையே இருந்துவந்தது.

குழந்தைத் திருமணச் சட்டம், 1929

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டது.

பதினெட்டு வயதுக்கு கீழே உள்ள பெண்களுக்கு மணம் செய்தல் கூடாது.

வரதட்சணை ஒழிப்புச் சட்டம் 1961

வரதட்சணை கொடுப்போரையும் வாங்குபவரையும் தண்டிக்கும் சட்டம். தண்டனை – 5 வருட சிறைத் தண்டனை. 15000 ரூபாய் அபராதம்.

பெண்களை அநாகரிகமாகக் காட்டுவதைத் தடை செய்யும் சட்டம், 1986

வர்த்தக விளம்பரங்களிலும், இதர ஊடகங்களிலும் மகளிரை மரியாதைக் குறைவாகச் சித்தரிப்பதைத் தடை செய்யும் நோக்குடன் இயற்றப்பட்டுள்ள சட்டம் இது. இதை மீறினால் முதல் குற்றத்திற்கு அதிகபட்சமாக 2 ஆண்டுச் சிறை, 2000 ரூபாய் அபராதம். இரண்டாவது குற்றத்திற்கு அதிகபட்சமாக 5 ஆண்டுச் சிறை,10,000 ரூபாய் அபராதம்.

குழந்தை பிறப்புக்கு முன் பாலியல் பகுப்பாய்வு நுட்பங்கள் (ஒழுங்குமுறை மற்றும் தடுப்பு) சட்டம், 1994 கருவில் இருக்கும் குழந்தையிடம் மரபணு அல்லது வளர்சிதை மாற்ற குறைபாடுகள் அல்லது பிறவிக் குறைபாடு முதலான கோளாறுகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்கான சோதனைகள் உள்ளன. இது போன்ற தொழில்நுட்பங்களைப் பெண் குழந்தைப் பிறப்புக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க இச்சட்டம் உதவுகிறது. பிறக்கும் சிசுவின் பாலினத்தைக் கண்டுபிடித்துப் பெண் சிசுவைக் கர்ப்பத்திலேயே கலைக்கும் கொடுமையைத் தடுப்பதே இதன் நோக்கம்.

SCROLL FOR NEXT