வலைஞர் பக்கம்

மூலிகை மாளிகை

செய்திப்பிரிவு

புத்தகக்காட்சிக்கு வந்தவர்களின் கண்களுக்குப் பசுமை விருந்தளிக்கின்றன ‘அத்ரி ஹெல்த் ப்ராடக்ட்ஸ்’ நிறுவனத்தின் அரங்கில் வைக்கப்பட்டிருக்கும் மூலிகைச் செடிகள்.

பொதுவாக, புத்தகங்களிடையே பூச்சிகள் வராமல் தடுக்க நாப்தலின் உருண்டைகள் பயன்படுத்துவதுண்டு. ஆனால், நாப்தலின் உருண்டைகளால் புற்றுநோய் அபாயம் இருப்பதாகக் கருதப்படுகிறது.

எனவே, அதற்கு மாற்றாக மூலிகைகளைப் பயன்படுத்தி, புதிய மருத்துவப் பொருளைத் தயாரித்திருப்பதாக அத்ரி நிறுவனத்தினர் கூறுகிறார்கள்.

இங்கு 108 வகையான மூலிகைச் செடிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 70 வகையான மூலிகைச் செடிகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. நாட்டுரகக் காய்கறி விதைகளும் இங்கு உண்டு!

SCROLL FOR NEXT