வலைஞர் பக்கம்

உங்களிடம் இருக்கின்றதா இந்தப் புத்தகம்? - நள்ளிரவில் சுதந்திரம்

செய்திப்பிரிவு

இந்தியச் சுதந்திரம் என்பது உலக வரலாற்றின் ஆகச் சிக்கலான திருப்புமுனைகளில் ஒன்று. 500க்கும் மேற்பட்ட சமஸ்தானத்து மன்னர்களைச் சமாளிப்பது, பிரிவினைக் கோரிக்கையை எதிர்கொள்வது என்று ஆங்கிலேய அரசும் காங்கிரஸ் தலைவர்களும் கடும் பதற்றத்தில் இருந்த காலகட்டம் அது. வரலாறு காணாத வன்முறை அரங்கேறிய அந்தக் காலகட்டத்தினை அதன் பல்வேறு சிக்கல்களுடன் நுணுக்கமாகவும் விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் பதிவுசெய்யும் நூல் இது. நவீன இந்தியாவின் உருவாக்கம் பற்றியும் அதை உருவாக்கியதில் ஆங்கிலேயர்களுக்கும் காந்தி, நேரு போன்றவர்களுக்கும் இருந்த பங்கினைப் பற்றியும் அறிய விரும்புபவர்கள் தவறவிடக் கூடாத நூல் இது.

டொமினிக் லேப்பியர், லேரி காலின்ஸ்
தமிழில்: வி.என்.ராகவன், மயிலை பாலு வெளியீடு: அலைகள் பதிப்பகம்
பக்கம்: 680, விலை ரூ. 350

SCROLL FOR NEXT