வலைஞர் பக்கம்

இணைய களம்: இந்தியா முன்னேற மந்திரம்

செய்திப்பிரிவு

இளங்கோ கிருஷ்ணன்

குருவே இந்தியா முன்னேற ஒரு மந்திரம் சொல்லுங்க....

இஸ்தலக்கிடி லாலா சுந்தரி கோலா கொப்பற கொய்யா....!

விஷ்வா விஸ்வநாத்

எந்த யோகியும் காட்டை அழித்து,

கட்டிடம் கட்டி யோகம் செய்ததாக

வரலாறும் இல்லை.. புவியியலும் இல்லை..

வைர வியாபாரி பட்டினத்தார்கூட

‘காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்று

அனைத்தையும் துறந்தே ஞானம் அடைந்தார்

காட்டை அழித்து கட்டிடம் கட்டியல்ல..

முழுதாய் உணர்ந்த புத்தன்கூட

மாட மாளிகை, கோபுரங்களை

விட்டு விலகிச்சென்று

அரச மரத்தடியில்தான் ஞானமடைந்தான்

காட்டை அழித்து கட்டிடம் கட்டியல்ல..

காடழிந்தால் நாடழியும்

நாடழிந்தால் காடழியும்!

விஜயசங்கர் ராமச்சந்திரன்

அன்பே சிவமென்றால்

சிலையெதற்கு அன்பே!

SCROLL FOR NEXT