வலைஞர் பக்கம்

நெட்டிசன் நோட்ஸ்: காவல்துறை யாருக்கு நண்பன்?

க.சே.ரமணி பிரபா தேவி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்துக்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நகைக்கடைக்கு நேற்று நகை வாங்க வந்துள்ளனர். பணம் குறைவாக இருந்ததால், நகை வாங்க முடியவில்லை. இதனால், கடையில் இருந்து வெளியே வந்தவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த செங்கம் காவல் நிலைய போலீஸார் அவர்களிடம் விசாரித்துள்ளனர். அதற்கு அவர்கள், எங்கள் குடும்பப் பிரச்சினை என்பதால் நீங்கள் தலையிட வேண்டாம் என்று கூறியுள்ளனர். அதில், அவர்களுக்கும் போலீஸாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதனால் ஆத்திரமடைந்த 3 போலீஸாரும், அந்த குடும்பத்தினரை லத்தியால் பயங்கரமாக தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட அது வைரலாகி இருக்கிறது. காவல்துறையின் இந்த போக்கு குறித்து நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்?

அதிகார போதை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

ரோட்ல சண்டை போடுறதும் தப்பு; அதுக்கு போலீஸ் அரெஸ்ட் பண்ணாம அந்த குடும்பத்தை அடிச்சதும் தப்பு

ஒரு தாயின் கதறலினூடே மகனின் மண்டையைப் பிளந்து, மகனின் கண் முன்னே தந்தையை துவைத்தெடுத்து நீங்கள் அரங்கேற்றியிருக்கும் இந்த அராஜகம் எத்தனை குடியரசு தின அணிவகுப்புகளில் நெஞ்சை நிமிர்த்தி நடை போட்டுக் காட்டினாலும் அழியாது!

அப்பாவிகளிடம் வீரத்தைக்காட்டும் காக்கிச்சட்டை வீரர்கள்.

சும்மா குடும்பச் சண்டைக்கு போலீஸ் இவ்வளவு ஆக்ரோஷமா அடிக்க வாய்ப்பில்லை.

காவல்துறை‬ யாருக்கு நண்பன்?

ஏழைகளிடம் காட்டும் வீரத்தை காவல் துறை பணக்காரர்களிடம் காட்ட தயங்குவது ஏன்?

சட்டம் ஏழைகளை ஆள்கிறது. சட்டத்தைப் பணக்காரர்கள் ஆள்கிறார்கள்- கலீல் ஜிப்ரான்.

#திருவண்ணாமலை காவல்துறை

மக்கள் போலீஸ் அடிச்ச வீடியோ மட்டும் பார்த்து பேசுறாங்க. அந்த கணவன், மனைவி என்ன பேசி இருந்தா போலீஸ் அடிச்சிருக்கும்?

தமிழ்நாடு இனி சாமானியர் வாழ தகுதியில்லாத மாநிலமா?!

நாயை தாக்கிய மாணவர்கள் மருத்துவக்கல்லூரியிலிருந்து நீக்கம்..

மனிதனை தாக்கிய போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம்...

நீதிடா... நேர்மைடா... நெருப்புடா

அந்த ஆளு போலீஸ்கிட்ட அவ்ளோ அடிவாங்கிட்டு மகன் கழுத்த இன்னொரு போலீஸ் பிடிச்சதும் பதறிகிட்டு அங்க போயும் தடுக்குறாப்ள. #தகப்பன்சாமி

போலீஸின் அராஜகத்தை கண்டிப்பதோடு பொது இடத்தில் மனைவியை அடித்த அவர் கணவரையும் கண்டியுங்களேன். பொதுபுத்திக்கு இது தெரியவே தெரியாது, ஏனென்றால் பெண்கள் அடிவாங்க பிறந்தவர்கள். வீட்டில், ரோட்டில் என சுடுகாடு வரை அடித்துக்கொண்டே இருக்கலாம். ஏன்னா அது 'குடும்ப உரிமை'.

SCROLL FOR NEXT