செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் பாலியல் வன்கொடுமை செய்தி அதுவும் சிறார் மீதான பாலியல் வன்கொடுமை செய்தி இடம்பெறாத நாளே இல்லையென்று கூறும் அளவுக்கு அந்த வக்கிரம் நம் சமூகத்தில் மலிந்து கிடக்கிறது.
அதன் விளைவு நோயிலிருந்து தற்காத்துக் கொள்வதுபோல் சமூக அவலங்களில் இருந்தும் நம்மை காக்க பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை காலம் தந்துள்ளது.
முக்கியமாக நம் பிள்ளைகள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்களா என்ற சந்தேகம் நம் ஒவ்வொருவருக்கும் எழுகிறது. அதுவும் வேலைக்குச் செல்லும் பெற்றோர்களிடம் இந்தத் தவிப்பு அதிகப்படியாகவே இருக்கிறது.
எனவே, நம் பிள்ளைகளுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்களை சொல்லிக்கொடுக்க வேண்டியது நமது கடமை. அதைத்தான் இந்த வீடியோ பதிவில் சொல்லியிருக்கிறார்கள்.
கேரளாவின் நட்சத்திர நடிகரான நிவின் பாலி, குழந்தைகளுக்கு எது சரியான தொடுதல், எது தவறான தொடுதல் என்பதை சுட்டிக் காட்டுகிறார். அத்துடன் ஒவ்வொரு குழந்தையும் தன்னை பாலியல் சீண்டல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள சில ஆலோசனைகளையும் கூறியிருக்கிறார்.
'நோ' சொல்லுங்கள், அந்த இடத்திலிருது ஓடுங்கள், நம்பிக்கைக்குரிய பெரியவர்களிடம் சொல்லுங்கள்... (NO..GO.. TELL..) இவையே அவர் முன்வைக்கும் மூன்று ஆலோசனைகள்.
இந்த வீடியோவைப் பாருங்கள்..
</p><p xmlns="">இதில் சொல்லப்பட்டிருக்கும் ஆலோசனைகள் ஏற்புடையதே. ஆனால், துள்ளித்திரிந்து விளையாட வேண்டிய குழந்தைகளுக்கு பாலியல் ஆபத்துகள் அதிகரிக்கும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பது எவ்வளவு வேதனையான உண்மை.</p><p xmlns="">இந்த வீடியோவில் ஆண் பிள்ளைகளும் இடம் பெற்றிருக்கிறார்கள். நம் அனைவருக்கும் பரவலாக தெரிந்தது பெண் குழந்தைகள் மட்டுமே பாலியல் சீண்டலுக்கு ஆளாகின்றனர் என்பது. ஆனால், அதற்கு நிகராகவே ஆண் குழந்தைகளும் அத்துமீறல்களுக்கு ஆளாகின்றனர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?</p>