வலைஞர் பக்கம்

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 32: சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியம்

எஸ்.முத்தையா

மெட்றாஸ் மாநகர ஆணைய ராக இருந்த ஜே.பி.எல். ஷெனாய் நினைவில் வைக்கப்பட வேண்டியவர். அந்தக் காலத்தில் ’பீப்பிள்ஸ் பார்க்’ என்று அழைக்கப்பட்ட பகுதியில் ஒரு பெரிய விளையாட்டரங்கத்தையும் (நேரு ஸ்டேடியம்), எழும்பூரில் டென்னிஸ் விளையாட்டரங்கத் தையும் அவர்தான் கட்டினார். 1945-46 பகுதியில் இரு அரங்கங்களையும் கட்டத் தொடங்கி ஓராண்டுக்குள் கட்டி முடித்த சாதனையாளர். மாநகராட்சியின் வரி நிதிக் குழு அவ்வப்போது பணத்தை ஒதுக்கிக் கொடுத்துக்கொண்டே இருந் தது. அதைவிட முக்கியம் அன்றைய ராணுவம் ஆட்களையும் வாக னங்களையும் இலவசமாகக் கொடுத்து ஸ்டேடியம் விரைவாக கட்டி முடிக்கப் பெரிதும் உதவியது.

விளையாட்டில் ஆர்வம் மிக்கவர் ஷெனாய். அப்போதிருந்த மாகாண டென்னிஸ் கிளப்பில் தினமும் ஆட வந்துவிடுவார். அவருடைய டென்னிஸ் நண்பர்கள் சி.ராம சுவாமி, டி.பால கோபால் என்ற இருவரும் மெட்றாஸ் போன்ற மாநக ருக்கு டென்னிஸ் அரங்கம் ரொம்பவும் அவசியம் என்று வலி யுறுத்திக்கொண்டே இருந்தனர். இப்போது சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்துக்கு அருகில், இப்போதும் அதே பெய ரில் இருக்கும் அந்த அரங்கம் கட்டப்பட்டபோது, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னால் இருந்த மத்திய அரசிலும் நேரு பிரதம ராகப் பதவி வகித்தார். எனவே அவருடைய பெயர் சூட்டப்பட்டது.

மெட்றாஸ் மாநகராட்சியின் வரி நிதிக் குழுத் தலைவராக அப் போது பதவி வகித்த டி.ஆர். கோதண்டராம முதலியாரை இப் போதுள்ளவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். பழைய தலைமுறை யினர் கூட மறந்துவிட் டிருப்பார்கள். நீதிக் கட்சியைச் சேர்ந்த அவர் 20 ஆண்டுகள் மாநகராட்சி கவுன்சிலராக இருந்தார். சாரணர் இயக்கத்தில் ஆர்வம் உள்ளவர். 40 ஆண்டுகள் அதற்காகத் தன்னு டைய வாழ்க்கையை அர்ப்பணித் தார். ஆனால், அவர் ஒரு முறை கூட மாநகரத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதே இல்லை. ஆனால், அன்றைய மெட்றாஸின் வளர்ச்சிக்கு அவர் செய்த பணிகள் அளப்பரியவை.

பரிந்துரைகள்

இரண்டாவது உலகப் போருக் குப் பிறகு மெட்றாஸ் மாநகர வளர்ச்சிக்கு அவர் ஒரு பெருந் திட்டத்தைத் தயாரித்து அளித்தார். பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆறு ஆகியவற்றை மேம்படுத்தவும், வடக்கு மெட்றாஸில் கடல் அரிப்பைத் தடுக்கவும் அவர் தயாரித்த திட்டங்கள் அவ்வப்போது அமல்படுத்தப்பட்டன. மாநகராட்சி ஆதரவில் பள்ளிக்கூடங்கள், நூலகங்கள், மண்டல விளையாட் டரங்கங்கள் போன்றவற்றை ஏற் படுத்தினார். அவருடைய பரிந்து ரையைத்தான் ஷெனாய் ஏற்று, நேரு விளையாட்டரங்கத்தையும் டென்னிஸ் ஸ்டேடியத்தையும் கட்டி முடித்தார். நந்தனம், ஷெனாய் நகர், காந்தி நகர், அண்ணா நகர் (பிற்காலத்தில் பெயர் சூட்டப்பட்டது) பகுதிகள் புறநகர்ப் பகுதிகளாக வளர்ச்சி அடைய ஷெனாய் முக்கியப் பங்கு வகித்தார்.

அவர் காலத்தில் செய்த பரிந்துரைகளை அருங்காட்சி யகத்தில் இருந்து மீட்டு படித்துப் பார்த்தால் இப்போதைக் கும்கூட நகர வளர்ச்சிக்குப் பொருத்தமாகவே இருக்கும். அவர் மாநகராட்சி சார்பில் வங்கி, இன் சூரன்ஸ் நிறுவனம், கல்லூரிகள், ஓய்வு இல்லங்கள், போக்குவரத்து நிறுவனம், பிச்சைக்காரர்களுக் கான இல்லங்கள் போன்ற வற்றைக்கூட உருவாக்க விரும்பி யிருந்தார்.

நியூசிலாந்து அணி

நேரு ஸ்டேடியம் கட்டப்பட்ட போது எல்லாவித விளையாட்டு களுக்குமான களமாகத்தான் கட்டினர். ஆனால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த அவர்கள் நினைக்கவேயில்லை. கால்பந்து, உடல் சீர் போட்டிகள் (அதலடிக்ஸ்), ஹாக்கி போன்ற வற்றுக்கு அது உற்ற களமாக இருந்தது. அப்போது மெட்றாஸ் கிரிக்கெட் அசோசியேஷனுக்கும் (எம்சிஏ), மெட்றாஸ் கிரிக்கெட் கிளப்புக்கும் (எம்சிசி) இடையே பலத்த கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 1955-56ல் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தது. அதனுடனான ஐந்தா வதும் இறுதியுமான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை சேப்பாக் கத்தில் உள்ள ஸ்டேடியத்தில் நடத்த எம்சிஏ விரும்பியது.

சேப்பாக்கத்தை குத்தகைக்கு எடுத்திருந்த எம்சிசி அதற்குச் சம்ம திக்கவில்லை. உடனே நேரு ஸ்டே டியத்தில் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை நடத்த எம்சிஏ ஏற்பாடுகளைச் செய்தது.

அந்த டெஸ்ட் போட்டி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இடம் பெற்று விட்டது.

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி அதே ஸ்டேடியத்தில் ஆடியது. அந்தத் தொடரில் ஆஸ்திரேலியா மேலும் 2 டெஸ்ட் களிலும் வென்றது. அத்துடன் நேரு ஸ்டேடியம் இந்தியாவுக்கு ராசி என்ற நம்பிக்கை போய் விட்டது. அதற்குப் பிறகு 1964 முதல் சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. நேரு ஸ்டேடியம் இப்போதும் புதிய பொலிவுடன், பழைய நினைவுகளையும் சுமந்து வரலாற்று சாட்சியாகத் திகழ்கிறது.

- சரித்திரம் பேசும்…

SCROLL FOR NEXT