வலைஞர் பக்கம்

யூடியூப் பகிர்வு: முதியோர் வன்கொடுமை எதிர்ப்பு- தெய்வங்கள் வாழும் வீடு செய்வோம்!

க.சே.ரமணி பிரபா தேவி

ஜூன் 15 - உலக முதியோர் வன்கொடுமை எதிர்ப்பு தினம்

முதியோர்கள்- வயதில் மட்டுமா பெரியவர்கள்? அனுபவத்தில், சொல்லில், செயலில், சிந்தனையில், நற்பண்பில், வாழ்க்கையில் என அனைத்திலுமே பெரியோர்கள்.

குழந்தைப் பருவத்தில் அவர்களைப் பார்த்தே வளர்ந்து, அவர்களால் கவரப்பட்டு, அவர்களையே பின்பற்றிய நாம், நமது இளமைப் பருவத்தில் அவர்களை ஒதுக்கலாமா? சரியான உணவு, உடை அளிக்காதது மட்டும்தான் கொடுமையா? 'உனக்கு இதெல்லாம் தெரியாதும்மா', 'இதுல எதுக்குப்பா தலையிடறீங்க?', 'உங்க அப்பா, அம்மாவுக்கு என்ன தெரியும்?' என்னும் சொற்களும் அவர்களைத் துன்புறுத்தும்.

ஆறில்லா ஊருக்கும், ஆளில்லா வீட்டுக்கும் அழகு பாழ்தானே..

அம்மாவும், அப்பாவும் எந்நாளும் வீட்டுக்கு சாமி போல்தானே...

*

பெற்றவர் இல்லா வெற்றிடம் எல்லாம்

காற்று இல்லா விளைநிலம்தான்..

*

உருவம் வரைந்த உறவுகள் இங்கே உதிர்ந்திடலாமோ..

உயிரை ஊதிய கருவறை சொந்தம் கலங்கிடலாமோ...

வரிகளே போதும், வலியை உணர்த்திச் செல்ல..!

காணொலியைக் காண:

</p><p xmlns="">அமலன் ஜெரோமின் வரிகள் குறும்படத்துக்கு வலிமை சேர்க்கின்றன. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் இதைத் தயாரித்திருக்கிறது.</p><p xmlns="">முகச் சுருக்கமும், கண்களின் கனிவும் முதியோரின் அனுபவம் பேசும். நல்லதை வீசும். ஆனால் அதை என்றாவது காதுகொடுத்துப் பொறுமையாகக் கேட்டிருக்கிறோமா? இனியாவது கேட்கலாமே!</p>

SCROLL FOR NEXT